இது விபரீதம்...
இது விவாதத்திற்கு அல்ல என் வருத்தமதை சொல்ல! கடந்த நூற்றாண்டின் கடைசி சித்தராய் நாம் நினைத்த மூத்தோர் ஒருத்தர் இங்கே- அவரை முறைப்போர் இல்லை! பெரியவர் என பெயர் கொண்டு பெரிதாய் வல மந்தார் வயதை வாய்ப்பாக்கி வாய்த்த போதெல்லாம் வார்த்தைகளை வசையாக்கி நாவினில் இசையாக்கி இன்னல்களுக்கு வழி சொல்லாது இன்னும் பல பேசி இருட்டை வெளிச்சமாக்க வெளிவந்தார் பழமாய்- வலம் வந்தார் பலமாய்! நல்லதே என்றுதான் நா(மு)ம் நினைத்தோம் பின் சென்றோம் அவரது எண்ணம் வீணாவது போல் கடைசியில் உரித்தால் ஒன்றுமில்லா சில வெங்காயங்களை திராவிடம் தேசியம் நாத்திகம்... என வெள்ளித் தட்டில் தமிழ்திரு நாட்டிற்கு (மட்டும்) தந்துவிட்டே சென்றார் தரணி ஆள தகுதியில்லாதோர் கைகளில்... பாவம் அவருக் கெப்படித் தெரியும் - இது உழைக்காது பிழைக்க வழி யென்று! முக்கு முனையிலும் எதுகை மோனையிலும் கவிதையாய் கதையாய் தவளையாய் தவழ விட்டு வாயால் வயிறு வளர்த்தவர்கள் அனேகம் என்பேன்! கடந்தோடிய அக் கஷ்டகாலம் அதை கையில் எடுத்தவரும் கத்தி கத்தி- கத்திக் கொண்டு அறுத்தவரும் மக்கள் மத்தியில் ஜனச் சட்டியில் போட... கண்டவர் கண்ணுக்கு...