Posts

Showing posts from September, 2024

சினிமா - சினிமா!

அன்றும் இன்றும்  அமைதிக்கும்  நிம் மதிக்கும்  மன மகிழ்வுடன்  அயர்ச்சி போக்க பொழுது போக்கவும்.. களமாக இருந்தது அன்றைய - திரையரங்குகள்  திரைப் படங்கள்! அரிதாரம் அதிகமாக  இருந்தாலும்  தெளிவான முகங்கள்! இனிமையான இசை வார்த்தைகள் புரியும்  பாடல்கள்! எதார்த்த வசனங்கள்  உணர்ச்சி பூர்வமாக  உணர்வு பூர்வமாக சினமாக்கவும் - சிரிக்கவும்! கண் கூசாத ஒளிப்பதிவு  இரைச்சல் குறைச்சலாக ஒலிப்பதிவு! ஐந்து அரை மணி நேரம்  போ(ன)வது தெரியாது! ஆனா - இன்று  இரைச்சலேடு இம்சையா இசை! கண் கூசும் ஒளிப்பதிவு  செவி மறுக்கும்  ஒலிப்பதிவு! அழகான முகங்கள் கூட அரிதார பூச்சில்  அன்மை குறைக்கிறது  வித்யாசம் என்கிற  பெயரில்! வரிகள் குறைத்து வார்த்தைகள்  புரியாது பாடல்கள்! தவறில்லை  தப்பில்லை - நமக்கு  அது - ஒப்பவில்லை! ஒரு நல்ல ஞாயிறு மாலை  வாடிப் போனது! தேடிப் போன விளைவு.. எத்தனை யோ படங்கள்  மறு முறையும்  அதிக முறையும்  பார்த்து இருப்பேன்! இப்ப - அப்படி யான  படங்கள் வருவதில்லை! வேறு சில படங்கள் ...