வருத்தங்களுடன்.... நான்!
பன்னிரு தினங்கள் கண் நீர் கனைகளாய்... ஒரு டஜன் நாட்களும் கவலைக் குகையில் மனங் கலங்கிய நாட்களாய் தொடர் போராட்டமாய் போக்கு காட்டிய நகரா மணித் துளிகள் அகலா மரண வலிகள்! வேதனை யின் வேகத்தில் வேகும் தீயில்... வெந்துதான் போனது மனம்- நொந்துதான் போனது! துயரத் துரத்தலில் தூங்கா விழிகள் துடி துடித்து படப் படத்து குறுகி போனது- மனம் கருகிப் போனது! வேறு யோசிப்பின்றி ஏதும் வாசிப்பின்றி இறை யாசிப் பன்றி... ஏதும் நாடாவது போனது அத்துனையும் கடந்தும் போனது! விதி வலியது! வீண் தர்க்கமில்லை மரணப் படுக்கையில் மகனைப் பார்த்து, பார்த்து... மரத்துப் போனது மற்றது யாவும் மறந்து போனது! தெளியவே இத்தனை நாட்கள் தெரிவிக்க முடியவில்லை! இரு சக்கர வாகன விபத்தில் இடது காலில் இரு இடத்திலும் இடது முகவாயில் இரு இடத்திலும் மோதிப் பார்த்த தில் உடைந்தது வெறும் எலும்புகள் மட்டுமல்ல... எங்களது மனமும் தைரியமுந் தான்! மூன்று அறுவை சிகிச்சைக்கு பின் ஆறுதலாய் சில நிகழ்வுகள் ஆயினும் இன்னும் குணமாகவில்லை முழுவதுமாய் சுகமாகவில்லை... எங்களது மனநிலைப் போலவே அவனது உடல் நிலையும்! அதிக இரத்த இழப்பும் இரத்த நாண சேதமும் பேரிழப்பு இல்...