வருந்த வில்லை...!

எண்ணெய் குளியல் இல்லை
எண்ணக் குளியலே!
இனிப்பு பலகார மில்லை
இனிய பழ ஆகாரம் உண்டே
புத்தாடை புது துணி இல்லை
புதிதாய் துணிவே எல்லை
மத்தாப்பு பட்டா சில்லை
மனதிற்குள் ஒளியும்
ஒலியாய்...
ஆலய தரிசனமில்லை
ஆஸ்பத்திரி அறை எண்
மூன்று ஒன்று இரண்டு
மந்திரங்கள் மட்டும் உச்சரித்துக் கொண்டு
மனதில் கவலை இல்லை
மகனின் நிலை பரவாயில்லை!
அம்மாவாசை நினைவில்லை
அவ்வழி விரதமில்லை!
இனிதாய் கடந்தனவே
இனிய தீ ஆவளி திருநாள்!
வாழ்த்துகள் பல கூறி
மனம் மகிழ்ந்தே
இன்று ஒரு நாளாய்
இன்னு  மொரு நாளாய்
ஐப்பசி கடந்தனவே
அய்யம் பசியாய் மறைந்தனவே!
தெளிவு பிறந்த்து
இங்கும் பலர் பண்டிகை
இல்லாது...
தெளிய மறைந்தது
இன்று ஒரு நாளாய்
மறவாத திருநாளாய்...
மறப்பதற்கு வெகுநாளாய்
இருந்திடாது-
இறை வேண்டி
குரு வணங்கி
நல்லதே நடக்க நா
வேண்டுகிறேன்!
நாளை நடப்பதும்
நடக்க விருப்பதும்
நன்மையாய், நன்மைக்கே
என-
இன்றும் கடந்தது
நிறையாய்
என்றும் கடக்கவே 
காக்கவே இறைவா
என் தலைவா
என் குருவே நீ
வாழ்க வாழ்க
என்றென்றும்!



Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1