வேலுநாச்சியார்! - 1



வேலு நாச்சி அவ
வீர சாட்சி!
மறவர் பிறப்பு-அவள்
மறவாத இருப்பு!
வெள்ளையேன் கண்ணீல்-
விரல் விட்டு
ஆட்டியவர்களில்
அவ விரலும் ஒன்று!

வடக்கே ஜான்சி
ராணிக்கு முன்னே
தெற்கே பேன்சி(பேமஸ்)
ராணியாய் ஆனவள்!
வீர தமிழச்சி
விவேகம் அவகட்சி!

நயவஞ்சகன் நவாப்மூலம்
நிர்கதியாய் ஆனவள்
நடுத்தெருவிற்கு வந்தவள் - பின்
அவன் குல நடுங்கச்
செய்தவள்...
நெற்குதிராய் நிமிர்தவள்!

சிவகங்கை சீமைக்கு
சீராய் புகுந்த மகிமை
கணவர் இறந்ததும்
போராய் எழுந்த பெருமை!
உடன்கட்டை ஏறாது
உடல் சுட்டே குறைக்காது
நெஞ்சுக்குழி ஈரம்
மறையாது
அவ ராணி ஆன வீரம்
மறக்காது!

இரமாநாத புரம் ஜில்லாவில்
பிறந்ததோர் நன்நாளில்
சக்கந்தி கிராமத்தில்
சக்தி வாய்ந்த நாமத்தில்
வேலுநாச்சி பிறந்தார்
நூற்றாண்டை கடந்து
சொல்லாட்சி யாய்
திகழ்ந்தார்!

விஜயரகுநாத செல்லத்துரை சேதுபதி
இவ பிறப்பிற்கான
அதிபதி!
முத்தாத்தாள் நாச்சியார்
இவளைப் பெற்றவள்
மனமறிய கற்றவள்
இனமறிய கற்பித்தவள்
இளமங்கையாய்-இன
வேங்கை யாய்
பிரசவித்தவள்...

கைவீச்சு கண்வீச்சு
கத்திவீச்சு புத்திவீச்சு
எல்லாமே அவளிடம்
முழுவீச்சில் தான்!
நேர்முக பேச்சில்தான்!
மறைமுகம் அவளிடம்
மறந்தும் மருந்துக்கும்
இல்லை!

எதிரி தேடிவரும் நேரம்
எதிரே நாடிப்போகும்
வீரம்!
பாசம் அவளிடத்து ஆதாரம்
நாட்டுப்பற்று அவளது
ஆகாரம்!
பயன் யென்பது சேதாரம்
பலந்தந்தது ஒரு தாரம்!

பருவம் யடைந்ததும்-நல்
உருவ மடைந்ததும்
மனமொடிந்ததும் அங்கே
மனம் முடித்தது சிவகங்கை!

சிவகங்கை ராஜாவுக்கு
சீதனமாக  சீர் எழிலாக
மன்னர் முத்துவடுக நாதருக்கு ராணியாக...
பின்னர் ஏணியாக-அவர் குலம் காக்கும்
கேணியாக
குணங் காக்கும் தோணியாக
அவரைச் சுற்றி தேனீயாக...
அவர் பயிற்சிலும்
முயற்சிலும் பங்கு
கொள்ளும் ராணியாக!

பெண் யென்று தயங்கியதில்லை
பேரம் மென்று
தனிந்தது இல்லை!
வாழ் வென்பது
 ஒருமுறை என்றே
வாழ்ந்தவள்
நடைமுறையில் அன்றே!
தேகத்தில் யில்லை சோரம்
தேக்கியதில்லை சோகம்!
அவளது மோகமும்
 போகமும் மகளாய்
ஒரு வெள்ளச்சி
அவள் தானே பின்
இளவரசி!

சீராய் சென்ற குதுகுலத்தில்
சீக்கிரமே வந்தது
குலம் கெடுக்க...
குலை நடுங்க!
காளையார் கோவில்
விசேடத்தில்
நவாப் படை சூழ்ந்த
விசயத்தில்
கவணமின்றி விட்ட
காரியத்தில்
கடைசியாய் போனது
மன்னரது உயிர் வீரத்தில்!

வெகுண்டு டெழுந்த
நாச்சியார்
காளையர் கோவில்
புறப்பட...
பலர் தடுத்தம் கேளாது
கண்ணீரது மாளாது
தனிப்படை தயவில்...
அங்கே
சிவகங்கையும் சிதறிப்போனது
நவாப் வசம்
இடறிப் போனது!

கணவனைஇழந்து
ஆட்சி கட்டிலையிழந்து
சினம் கொண்டார்
பழித்திருக்கும்
மனம் கொண்டார்!
நவாப்பின்  நயவஞ்சகம்
நாடகமாக போனது
அவள் நாடாளாமல்
போனதும்!

திணறிய மனசு
திசை மாறா போனது!
வெஞ்சினம் உரு
மாறாப் போனது!
மேலூர் தாண்டி
திண்டுக்கல் வழியே
விருப்பாச்சி மேடு
தங்க வசமாய் ஒர்
ஏற்பாடு
ஆண்டுகள் ஆன போதும்
அவள் ஆத்திரம்
அடங்கவில்லை
ஆழ்மனம் ஒடுங்கவில்லை!

திட்டம் தீட்டி அதை
கூர் ஏத்தி...
தீர்க்கமாய் ஒரு முடிவு!
ஹைதர் அலியின் ஆதரவு கோரப்பட்டது
நேரில்
மாறுவேடம் பூண்டு
மன்னனை சந்திக்க!
மன்னர் வினாவினான்
ராணி எங்கே?
புரவியில் இறங்கி
உருமாவை உருவி
கூந்தலை சொருகி
நடந்து வந்த அருவி..
நான் தான் நாச்சியார்
உருது பேச
உறுதியானது உதவி!
ஐயாயிரம் காலாட்படை
ஐயாயிரம் குதிரை படை
உடன் திட்டம் வகுக்கப்பட்டது
திடமாய் தொகுக்கப்பட்டது
வரைபடத்தை விரைவு படுத்த...
ஓலை அனுப்பப்பட்டது
உள்ளுர் கிளர்ச்சிக்கும்
ஆளை அனுப்பி
தூண்டப்பட்டது நாச்சியார்
சார்பாக வேண்டப்பட்டது!
இத்தனைக்கும் உறுதுணையாக இருவர்...
தொடரும்!

Comments

Popular posts from this blog

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1