ஆண்டாள் பெருமை!



என் ஆண்டாளின் பெருமை
 அன்று-அவள்
காத்த பொருமை
காதலால் கடவுளைச்
சேர்ந்த உவமை!
ஒரு கோடி மலர் கூடி
உருவானவள்-அக்
கோதை மலர் சூடித்
திருவானவள்!

தரத்தில்லே தங்கத்தின்
நிறமானவள்
தவத்தில்லே திருமாலின்
 நிழலானவள்!
நினைவிலே அவனை
நீங்கா தவள்
நினைக்கையில்
கண் தூங்காதவள்
பெண்யின வர்க்கத்தில்
உயர் வானவள்
பேரின்ப உயரத்தில்
மேலானவள்!

குழந்தை யாய் காது
கொடுத்து கதை கேட்டவள்
ஶ்ரீ ரங்கத்து நாயகனை
தனக்கென்று காயத்தில்
சேர்த்த வள்!
கணவனை கடவுளாய்
பார்த்த பெண் இனம்
அந்த-கடவுளையே
கணவனாய் பார்த்தது
இவள் மனம்!
பெண் யென்றால்
பேயும் யிறங்கும்
பேச்சுக்கு...
ஆனால் -அந்த
பெருமாளு(னு)ம்
இறங்கினார் அவ
மூச்சுக்கு!

பெண் நினைத்தால்
முடியாதது ஏதுமில்லை
ஏளனம் கடந்து
ஏழ்மை கடந்து-அந்த
ஏகாந்த மூர்த்தி யை
மனமுடித்து காட்டிய
திலகவதி!
ஆழ்வார்கள் இடையே
திகலும் யுவதி
நாயன்மார்களைத் தெரியும் ஆழ்வார்களைத் தெரியும்
இந்த தாயின் மாரைத்
தெரியுமா
அந்த ஆண்டாளைத்
தெரியுமா!
ஆழ்வார்களில் ஆண்டாள் மட்டுமே
பெண் ஒருத்தி-அவ
மனம் நிறுத்தி-திரு
மண் பொறுத்தி...
பருவத்தில் வளரும்
போதே பகவானை
வலம் சேர்த்தவள்
மேலாடை போடும்
முன்னே - அவன்
தோளோடு கரம் சேர்த்தவள்
மனசோடு உரம் சேர்த்தவள் - அந்த
மேகவண்ணனை
தேகமெல்லாம்
தழுவி நின்றவள்!

பக்கத்து சிரிக்கி யெல்லாம்
 பார்த்து சிரிக்கையிலே-
பாதகமாய் விலகி
வந்த அவள்
கடவுளுக்கே காதல்
சொன்னவள்
காதலுக்காக கடவுளாய்
நின்ற அவள்!
இது மனித காதல்தான்
ஆனாலும் புனித காதல்!

பாட்டு எழுதி வீடு
முழுவதும் போட்டாள்
தூது சொல்ல-தானே
பட்டாடை உடுத்தி போனாள்..
அந்த பரந்த மார்தன்னில்
பரத்தையாய் நான்
இருப்பேன்
முறம் போல் முதுகு
தன்னில்
அறம் போல் ஒட்டி இருப்பேன்
நான் பிறந்தது உனக்கன்றோ-நா
வளர்ந்ததம் அதற்கென்றோ
நம் யிடையில் பிரிவுண்டோ...
என் நீலகண்டனே-உன்
நினேவு உண்டனே
உண்ணும் போதும்
உறங்கும் போதும்
உடுத்தும் பொதும்-உன்
நினைவு படுத்தும் போதும்
மலர் தொடுக்கும் போதும்
மனம் கனக்கும் போதும்
உன் நினைவன்றி வேறில்லை
உனை நினைப்பதை தவிர வேறு வேலை இல்லை!

அரங்க நாதா -
என் ஆளிங்க வேதா
மார்கழியில் மலர்
தொடுப்பேன்
மார் வழியே பால்
கொடுப்பேன்
என் முகந்தனுக்கு-அந்த
கரு சுகந்தனுக்கு!
என் கண்கள் உனை
பார்க்க மட்டும்
என் நாசிகள் உன்
பார்வை சுவாசிக்க
என் கண்ணம் இரண்டும் -நீ
கவணிக்க வேண்டும்
நித்தம் சிவக்காது
நிறுத்தல் வேண்டும்
என் இதழ் உன்னை
போற்றிப் பாட
என் கை மலர் தொடுக்க
மனம் தடுக்க
என் நா பா தொடுக்க
பதில் கொடுக்க
தோள் இரண்டு
மலர் கொண்டு மனம்
சேர்க்க துணை சேர்க்க
மார் ரெண்டும் உன்
முகம் மறைக்க
நெஞ்சத்து மனம்
உனை நேசிக்க-நீ வாசிக்க
என் வயிறு உன்
உயிர் முட்ட
இடை இருக்கட்டும்
உன்னுடன்
பிட்டம் ரெண்டும்
உன் பிடி இருக்க
தொடை ரெண்டும்
உன் கொடை தாங்க
முட்டி முழந்தாள்
மண்டியிட்டு வணங்கிட
கால் ரெண்டும்
காரியம் சொல்லும்
பாதம் ரெண்டும்
மண் மிதிக்கும்-என்னை
மறவாமல் நான் இருக்க...

தொடரும்!

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

கல்லனை-1