கல்லனை-1
கல்லணை...!
கல்லால் கட்டப்பட்ட அணை!
காவிரி குறுக்கே வெள்ள பெருக்கை
பெரும் நீரை...
கல் யானையாய் நின்று
தடுக்கும் அணை தடுப்பணை!
இதற்கு இல்லை ஈடு இணை...
சோழப் பாட்டன் கொடுத்த கொடை
கொடுப்பினை!
அவன்
காவியத்தலைவன்
முதுப்பெரும் கலைஞன்
மூத்தச் சோழன்
தன்நிகரில்லா தமிழன்
சத்தியம் காத்தவன்
சரித்திரம் படைத்தவன்
விசித்தர மானவன்
சான்றோர் கூற்று
சரணமாய் ஏற்று
சைவத்தை பற்றி
சிவத்தைப் போற்றி
ஞாயறாய் வாழ்ந்தவன்
திங்களாய் திகழ்ந்தவன்!
வேளா(ல)ன் வேதனையின்
வேர் அறிந்தவன்
மழை இல்லா வேளையிலும்
பிழைஇல்லா
நீர்த் தேக்கி
பயிர்தழைக்க
அணை கட்டியவன்
தமிழகத்திற்கு
தடுப்பணையை
தகப்பனாய் அறிமுகப்படுத்தியவன்!
ஈர் ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே
இருபது நூறாண்டுகள்
ஐம்பது தலைமுறைகள்
2400 சித்திரை
24000 பௌர்ணமி கள்
கண்ட அணை...
என்ன சொல்லது அந்த
தெம்பை எப்படிச் சொல்வது அந்த பண்பை
கல்லால் கட்டிவைத்தான்
தன் அன்பை!
அணையாய் அழியாப்
புகழாய்-யாரும்
அறியா புதிராய்...
ஊர் மகிழ உணவு பெருக
பயிர் செழிக்க
வளம் கொழிக்க
மழைபெற வான்மகிழ
வரப்புயர மக்கள்
நலம்பெற கட்டப்பட்ட
கல்லணை!
பேரின்பத்தான்
பெரும்படை கொண்ட
சோழ தேசத்து மாமன்னன்!
பார் முழுதும் பார்க்கப்பட்டவன்
போர் இயக்கமட்டுமல்ல
கட்டிட கலையின்
பேரியக்கமும் கண்ட
கரிகால் பெருவளத்தான்
பெருந்தோள் படைத்தவன்
பலசேனை
கொண்டு நல் யோசனை
படைத்தவன்!
ஆசானாய் நின்று
கரிசனையாய் அன்று
கல்லணை கொடுத்தான்...
கரிகாலன் என்னும்
பெருமனத்தான்!
அன்று-
பொறியாளர்கள் இல்லை!
பொருப்பாளர்களைக்
கொண்டு பொறிக்கப்
பட்டது அல்ல-அது
கல்லால் தறிக்கப்பட்டது
சுன்னாம்பும் களிமண்ணும் சாந்தாய்
அப்பிய முறை...
நீர் கசிவு இல்லாத வரை
பூசிய நுண்கலை
கண்டது பல ஆய்வுகளை...
பலன்-அறியவில்லை
யாரும் அறிவித்தனர்
அத்தனைப் பேரும்
அக்கலவையின்
ரகசியம் காண முடியவில்லை அதன் இயல்பு தெரியவில்லை!
கட்டினான் நம்கலையை
நம்பி
பார்த்தனர் பலரும்
அதை வெம்பி
சுமார் ஆறுநூறு ஆண்டுக்கு பின் காண
வந்தார் ஆங்கில அம்பி
சர் ஆர்தர் காட்டன்
ஒளிவு மறைவின்றி
ஒப்புக்கொண்டார்
ஒப்பற்ற திட்டம்!
ஒப்பில்லா அணை!
மகத்தானது இது
இனி-கிரான்ட் அணைக்கட்
அறியப்பட்டு
அறிமுகப்படுத்தினார்!
கலை இயல் இதை
பட்டினப் பாலையும்
பொருநர் ஆற்றுப்படையும்
போற்றியது தம்
பாடலில் இயற்றியது!
இயங்கியது அணை
நீர் தடுத்து
மதகு பிரித்து மூன்றாய்
பென்னாறு புதுஆறு
கொல்லிடம்
மூவாறுக்கும் நீர் பரவியது
பயிர் பெருகியது
சோறுபடைத்த நாடு
சோழ நாடு
பேருபடைத்ததோடு
பேணவும் செய்தனர்
தான் வாழ்வதோடு
தன்வாழ்வோடு!
தேவா.
பாகம் இரண்டு தொடரும்!
கல்லால் கட்டப்பட்ட அணை!
காவிரி குறுக்கே வெள்ள பெருக்கை
பெரும் நீரை...
கல் யானையாய் நின்று
தடுக்கும் அணை தடுப்பணை!
இதற்கு இல்லை ஈடு இணை...
சோழப் பாட்டன் கொடுத்த கொடை
கொடுப்பினை!
அவன்
காவியத்தலைவன்
முதுப்பெரும் கலைஞன்
மூத்தச் சோழன்
தன்நிகரில்லா தமிழன்
சத்தியம் காத்தவன்
சரித்திரம் படைத்தவன்
விசித்தர மானவன்
சான்றோர் கூற்று
சரணமாய் ஏற்று
சைவத்தை பற்றி
சிவத்தைப் போற்றி
ஞாயறாய் வாழ்ந்தவன்
திங்களாய் திகழ்ந்தவன்!
வேளா(ல)ன் வேதனையின்
வேர் அறிந்தவன்
மழை இல்லா வேளையிலும்
பிழைஇல்லா
நீர்த் தேக்கி
பயிர்தழைக்க
அணை கட்டியவன்
தமிழகத்திற்கு
தடுப்பணையை
தகப்பனாய் அறிமுகப்படுத்தியவன்!
ஈர் ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே
இருபது நூறாண்டுகள்
ஐம்பது தலைமுறைகள்
2400 சித்திரை
24000 பௌர்ணமி கள்
கண்ட அணை...
என்ன சொல்லது அந்த
தெம்பை எப்படிச் சொல்வது அந்த பண்பை
கல்லால் கட்டிவைத்தான்
தன் அன்பை!
அணையாய் அழியாப்
புகழாய்-யாரும்
அறியா புதிராய்...
ஊர் மகிழ உணவு பெருக
பயிர் செழிக்க
வளம் கொழிக்க
மழைபெற வான்மகிழ
வரப்புயர மக்கள்
நலம்பெற கட்டப்பட்ட
கல்லணை!
பேரின்பத்தான்
பெரும்படை கொண்ட
சோழ தேசத்து மாமன்னன்!
பார் முழுதும் பார்க்கப்பட்டவன்
போர் இயக்கமட்டுமல்ல
கட்டிட கலையின்
பேரியக்கமும் கண்ட
கரிகால் பெருவளத்தான்
பெருந்தோள் படைத்தவன்
பலசேனை
கொண்டு நல் யோசனை
படைத்தவன்!
ஆசானாய் நின்று
கரிசனையாய் அன்று
கல்லணை கொடுத்தான்...
கரிகாலன் என்னும்
பெருமனத்தான்!
அன்று-
பொறியாளர்கள் இல்லை!
பொருப்பாளர்களைக்
கொண்டு பொறிக்கப்
பட்டது அல்ல-அது
கல்லால் தறிக்கப்பட்டது
சுன்னாம்பும் களிமண்ணும் சாந்தாய்
அப்பிய முறை...
நீர் கசிவு இல்லாத வரை
பூசிய நுண்கலை
கண்டது பல ஆய்வுகளை...
பலன்-அறியவில்லை
யாரும் அறிவித்தனர்
அத்தனைப் பேரும்
அக்கலவையின்
ரகசியம் காண முடியவில்லை அதன் இயல்பு தெரியவில்லை!
கட்டினான் நம்கலையை
நம்பி
பார்த்தனர் பலரும்
அதை வெம்பி
சுமார் ஆறுநூறு ஆண்டுக்கு பின் காண
வந்தார் ஆங்கில அம்பி
சர் ஆர்தர் காட்டன்
ஒளிவு மறைவின்றி
ஒப்புக்கொண்டார்
ஒப்பற்ற திட்டம்!
ஒப்பில்லா அணை!
மகத்தானது இது
இனி-கிரான்ட் அணைக்கட்
அறியப்பட்டு
அறிமுகப்படுத்தினார்!
கலை இயல் இதை
பட்டினப் பாலையும்
பொருநர் ஆற்றுப்படையும்
போற்றியது தம்
பாடலில் இயற்றியது!
இயங்கியது அணை
நீர் தடுத்து
மதகு பிரித்து மூன்றாய்
பென்னாறு புதுஆறு
கொல்லிடம்
மூவாறுக்கும் நீர் பரவியது
பயிர் பெருகியது
சோறுபடைத்த நாடு
சோழ நாடு
பேருபடைத்ததோடு
பேணவும் செய்தனர்
தான் வாழ்வதோடு
தன்வாழ்வோடு!
தேவா.
பாகம் இரண்டு தொடரும்!
Comments
Post a Comment