தீ ஆவளி! வாழ்த்துகள்
இல்லந் தோறும்
தீபம் ஏறட்டும்
ஒளி பரவட்டும்
இருள் அகலட்டும்
இன்னல்கள் விலகட்டும்
இன்னும் பிற...
நல்லதாய்
எண்ணங்கள் வலுவாகட்டும்
மனம் சிறக்க
வாழ பழகு
வாழ்க்கை எளிது!
வார்த்தை பழகு
வாழ்வது எளிது!
எதிலும்-
குறை காணாது
நிறை கானுங்கள்- அதில்
இறை கானுங்கள்
இறை காண
குரு நாடுங்கள்!
நிதானம் நிறை கொடுக்கும்
பொறுமை பொக்கிசமாய்...
புகழ் சேர
இன்பம், செல்வம் பெருக
இன்னும் பிற... வளர
தீப ஒளி ஏற்றுங்கள்!
எங்கும், எதிலும்
நிறை காண
இறை வேண்டுகிறேன்
குரு வேண்டி
வாழ்த்துகிறேன்!
தீ ஆவளி திருநாள்
வாழ்த்துகள்!
வாழ்க வளமுடன்
நலமுடன், தேக சுகமுடன்
என்றும்...
என்றென்றும்
அன்புடன்.
Comments
Post a Comment