கல்லனண - 2
பாகம் 2.
கல்லணை பிறந்த தெப்படி...
கரிகாலன் வருந்தியது
அப்படி!
வெள்ளத்தில் பயிர் அழிவதைக் கண்டான்
வேதனையில் வெந்தான்!
வெயிற் காலத்தில் நீர்
யின்றி பயிர் கருக
கண்டான் நொந்தான்!
தீர்வாய் தீர்க்கமாய்
ஒர் ஆனை! - உடனடி
நீர் தேக்க ஒரு அணை!
பறைச் சாற்றி முரசுக்
கொட்டிச் சொன்னான்
பின்னர்-
வெற்றிப் பிறைச் சூடிக்
கொண்டான்!
வெள்ள காலத்தில்
நொடிக்கு இரண்டு லட்சம் கணயடி நீர்வரத்து காவரியில்!
கால் பதிக்க-இழுக்கும்
அதுவே அரிச்சுவடியாய்
கல் பதித்து தடுத்தான்
அதன் மேல் ஒவ்வொன்றாய் கல்
அடுக்கி எடுத்தான்
தடுத்தான் வரும் நீரை
வென்றான்- அணை
கண்டான்
கல்லணை பெயர் கொண்டான்!
1080 அடி நீளம்
பத்தாள் படுத்த அகலம்
மூன்றாள் உயரம்!
முடியுமா அந் நாளில்?
முடிந்ததே! அதுவும்
முடிந்ததே பயன்பெற...
16 லட்சம் ஏக்கர் பாசன
பயன்பாட்டிற்கு
வழிகாட்டிய முப்போகம்
உயிர்வூட்டிய செம்மல்
கரிகாலன் பெருவளத்தான்!
எப்பயனை எதிர்பார்த்து
அப்பலனைக் கொடுத்தான்!
சிவப்பயனே அது நாம்
பெற்ற தவப்பயனே!
தவபுதழ்வனே-சோழ முதல்வனே-எம் மூத்தோனே-உம்மைக்
கண்டு அகம் வேர்த்தோமே..
கானும் போதெல்லாம்
மனம் கல்லாய் கரைந்து
கண்ணீராய் நனைந்து
இறைந்து போற்றுமே
உன்புகழ் வாழ்க நீடுழி!
இந்த வையம் இருக்குமட்டும்-அந்த
சந்திர சூரியர் உதிக்க
முட்டும்...
இது வின்னை எட்டும்
வின்மீன்களை காட்டும்
நன்றி களாய்...!
தமிழர்(சோழர்) பெருமைக்கு ஆதாரமாய் கண்டோம்
இன்னும்-இன்றும் அவர்
புகழை ஆகாரமாய் உண்டோம்
காயம்பட்ட இனத்திற்கு
காரியமாற்றும்
மருந்தாய் இன்றும்
விருந்தாய்...
இருபது நூறாண்டுகள்
பல தலைமுறைகள்
கடந்தும்-
வழிமுறையாய்...
விளைநிலங் காத்தே
நம்முடன் வாழ்ந்தே
வாழுதே கல்லணை!
அது இருக்கும் வரை
நமது நெஞ்சினில்
நிற்பான்...
காலத்தை வென்றவன்
கரிகாலன்!
கருத்தக்கால்
பெருத்த மார்
தடித்த தோல்
சிறுத்த இடை
விரிந்த தோள்
வெளுத்த மனம்
வீரமறவன் அன்றோ
மறப்பது நன்றா?!
மறவாதிருப்போம்!
பெரும் வளம் தந்த
பெருவளத்தானை!
வாழ்க வாழ்க!
வாழ்க வாழ்க!!
தேவா.
Comments
Post a Comment