கேளடி கிளியே...!
கேளடி கிளியே!
ஆளாய்ப் பறந்து
ஆவதென்ன கிளியே!
ஆண்டவனும் மாண்டான்
அப்புறம் எங்கே மீண்டான்!
ஆணவம் அடங்கவில்லை யே
ஆதங்க மானதடி கிளியே!
கண்ணால் கண்டும்
காதால் கேட்டும்
தீர ஆராய்ந்தும்-தெரிந்தும்
தெரியாது போனதடி கிளியே!
வந்தவர் போவார்
போனவர் வாரார்...
வாடிக்கை தானடி கிளியே!
ஆறடி நிலமாவாது
சொந்தம்-முன்னே
இப்ப அது(க்கு)கூட
அறுகதை இல்லையடி
கிளியே!
அரை மணிநேர வேலை
அரைப் படிச் சாம்பல்
மின் மயானத்தில்
மிச்ச(மாய்)மிருப்பதடி
களியே!
வேலைக்கு சோறு கண்டு
சோறுக்கு வழி கண்டு
சேர்த்து வைச்சாலும் கிளியே!
அவன் நோவாது இருந்தாலும்
சாவாது இருக்கப்
போவதில்லை கிளியே!
கட்டுக் கட்டாய் கரன்சியும்
கட்டி கட்டியாய் கனகமும்
காப்பாத்தி வைச்சானடி கிளியே!
உறவோடு போகும் இல்லை
இரவோடு போகும்-அவன்
இழவோடு போகுமாடி கிளியே!
நாடாண்ட மன்னனும்
நாடோடி மக்களும்
ஞாபக மில்லையடி கிளியே!
தானறிந்த சித்தரும்
ஞானம் சொன்ன புத்தரும்...
இங்கு நிலைக்கவில்லை கிளியே!
அதை நினைப்பது மில்லை கிளியே!
ஆயிரந்தான் சொன்னாலும்
வருத்தமது தந்தாலும்
உருத்தவா போகுதடி
கிளியே!
இவர்
அனுபவிக்க சுகமுண்டு
அத்தனையும் தனக்குண்டு சாவு யது
எனக்கில்லை...
சாத்திரம் பேசுங் கூட்டமடி கிளியே!
இது
சாதிக்காது பேசியே
சாதிப்பவரே யேசியே
சந்தோஷமாய் வாழும்
தேசமடி கிளியே!
தேவா.
ஆளாய்ப் பறந்து
ஆவதென்ன கிளியே!
ஆண்டவனும் மாண்டான்
அப்புறம் எங்கே மீண்டான்!
ஆணவம் அடங்கவில்லை யே
ஆதங்க மானதடி கிளியே!
கண்ணால் கண்டும்
காதால் கேட்டும்
தீர ஆராய்ந்தும்-தெரிந்தும்
தெரியாது போனதடி கிளியே!
வந்தவர் போவார்
போனவர் வாரார்...
வாடிக்கை தானடி கிளியே!
ஆறடி நிலமாவாது
சொந்தம்-முன்னே
இப்ப அது(க்கு)கூட
அறுகதை இல்லையடி
கிளியே!
அரை மணிநேர வேலை
அரைப் படிச் சாம்பல்
மின் மயானத்தில்
மிச்ச(மாய்)மிருப்பதடி
களியே!
வேலைக்கு சோறு கண்டு
சோறுக்கு வழி கண்டு
சேர்த்து வைச்சாலும் கிளியே!
அவன் நோவாது இருந்தாலும்
சாவாது இருக்கப்
போவதில்லை கிளியே!
கட்டுக் கட்டாய் கரன்சியும்
கட்டி கட்டியாய் கனகமும்
காப்பாத்தி வைச்சானடி கிளியே!
உறவோடு போகும் இல்லை
இரவோடு போகும்-அவன்
இழவோடு போகுமாடி கிளியே!
நாடாண்ட மன்னனும்
நாடோடி மக்களும்
ஞாபக மில்லையடி கிளியே!
தானறிந்த சித்தரும்
ஞானம் சொன்ன புத்தரும்...
இங்கு நிலைக்கவில்லை கிளியே!
அதை நினைப்பது மில்லை கிளியே!
ஆயிரந்தான் சொன்னாலும்
வருத்தமது தந்தாலும்
உருத்தவா போகுதடி
கிளியே!
இவர்
அனுபவிக்க சுகமுண்டு
அத்தனையும் தனக்குண்டு சாவு யது
எனக்கில்லை...
சாத்திரம் பேசுங் கூட்டமடி கிளியே!
இது
சாதிக்காது பேசியே
சாதிப்பவரே யேசியே
சந்தோஷமாய் வாழும்
தேசமடி கிளியே!
தேவா.
Comments
Post a Comment