விதி வசம்!

விதி வசம்...!

குறிஞ்சிப் பூக்கும்
நெருஞ்சியும் பூக்கும்!
பண்ணீரெண்டு யாண்டுக் கொருமுறை
மழை கண்டமாத்திரம்
மறு முறை...
மலை யோரத்தில்-இது
சாலை யோரத்தில்
உயரத்தில் உயர்வாய்
மதிக்கப்படும்
உயராது கால் மிதிப்படும்!

குறிஞ்சி கண்ணுக்கு விருந்தாகும்
நெருஞ்சி கண்டவருக்கு
(உடலுக்கு) மருந்தாகும்!
இரண்டும் பூவாகும்
இறைவனுக்கு ஒன்றாகும்!
ரெண்டும் பூக்களே
படைத்தவன் பார்வையில் வேரில்லை!

நீ!
குறிஞ்சியா நெருஞ்சியா...
பிறவியில் (பிறக்கையில்)
அறிஞ்சியா!?
வித்யாசம் வீணர்க்குத்தான்...
விதிக்கு அல்ல!
விதிவசம் விட்டுப்பார்
நீ
முயற்சியை மட்டும் தொட்டுப் பார்!

தேவா.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1