என் நினைப்பு....!

எழுத வேண்டாமுனு
நினைச்சேன்...
என் எண்ணத்தை
நானே அழிச்சேன்!

இங்கு-
எல்லாத் தலைவர்களும்
தன்நல மிக்கவர்களாய்
நல்ல வர்களாய்...
தேடி ஆப்படவில்லை!

நெருப்பின் நிழல்
சுடுமா!
அப்படித்தான்
இவர்களின் நிலையும்
நிழழும்...
பொருப்பற்ற பேச்சு
வெறுப்புற்றுப் போச்சு!

நிதான மில்லாத
நிர்வாகமும் அல்லாத
எந்த நிவாரணமும்
இல்லாத
நினைக்க மறுக்க
அவதூறு வார்த்தைகள்
எதிர்க்க மட்டுமே...
கோர்க்க அல்ல!

எண்ணத் தெளிவற்ற
பேச்சு
எதற்கு இந்த மூச்சு...
பணம் பண்ணும்
விதத்தில்-பத்து
சதவிகிதம் கூட
பற்றில்லை நம்மீது!

எப்பேர் பட்ட பூமிது
இதற்கு
இவர்கள் தான் பினாமி(யா)!
போனால் போகட்டும்
விடவா முடியும்...
என்றாவது ஒரு நாள்
இந்த கதையும் முடியும்!

நம்மால் ஆவதென்ன...
அலட்சியம் வேண்டா
நண்பர்களே
அன்பர்களே
இளைஞர்களே!
ஆவதும் அழிவதும்
இயல் பென்றால்...
இது அழியட்டும்!

அரசியல் யற்ற அமைப்பு
அசிங்கமற்று சமைப்போம்!
நாம் ஒன்றாய்
இணைவோம்-புது
இயக்கமாய்
ஆக்குவோம்...
புதிதாய் தாக்குவோம்!

ஒரு குடையின் கீழ்
ஓர் தலைமை யோ
அல்லது
ஒரு குழுவோ
கூடி விவாதிப்போம்!
தேசம் முழுவதும்
இல்லா விட்டாலும்-நம்
தமிழகத்தில் இதை
தொடங்குவோம்-பின்
தொடருவோம்!

ஒரு தொகுதி யிலாவது
முன் உதாரணமாய்
காட்டுவோம்!
அரசியல் யற்ற அமைப்பு
அது வளமாக்கும்
நம்மை பலமாக்கும்!
என்பது
என் நினைப்பு...

தேவா.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1