நீ இல்லாத போது...
நீ இல்லாத பொழுது
எப்போதும் போல்
இல்லை யே...
உன் நினைவு
தாங்கும் போதும்-உன்
நினைப்பு தூங்கும்
போதும்...
துயரக் கட்டிலில்
துயில்வதில்லை!
துடியலோடு சிறு
காரியங்கள்
நடைப்பெற்றாலும்...
நடைபெறாது போனது
உன் நினைப்பை
அழிக்கும் முயற்சியும்
அதற்கு நா(ன்)
மேற்கொண்ட பயிற்சியும்!
பசி போல் தூக்கம் போல் - பகிர்ந்தளிக்கும்
உன் நினைப்பு
உணர்வுகளாய் -
ஊடுருவி போனது
உடலுக்குள்...!
உண்மை தான்
காதலும் கஷ்டமும்
விலகா திருக்கும்
மனதில் - தினம்
வசித்திருக்கும்-சிலநேரம்
விலகி நின்று
வேடிக்கைப் பார்க்கும்
விசித்திரமாய்!
வினோதம்
விண்ணுக்குள் மட்டுமல்ல...
கண்ணுக்குள்ளுந்தான்!
தேவா.
எப்போதும் போல்
இல்லை யே...
உன் நினைவு
தாங்கும் போதும்-உன்
நினைப்பு தூங்கும்
போதும்...
துயரக் கட்டிலில்
துயில்வதில்லை!
துடியலோடு சிறு
காரியங்கள்
நடைப்பெற்றாலும்...
நடைபெறாது போனது
உன் நினைப்பை
அழிக்கும் முயற்சியும்
அதற்கு நா(ன்)
மேற்கொண்ட பயிற்சியும்!
பசி போல் தூக்கம் போல் - பகிர்ந்தளிக்கும்
உன் நினைப்பு
உணர்வுகளாய் -
ஊடுருவி போனது
உடலுக்குள்...!
உண்மை தான்
காதலும் கஷ்டமும்
விலகா திருக்கும்
மனதில் - தினம்
வசித்திருக்கும்-சிலநேரம்
விலகி நின்று
வேடிக்கைப் பார்க்கும்
விசித்திரமாய்!
வினோதம்
விண்ணுக்குள் மட்டுமல்ல...
கண்ணுக்குள்ளுந்தான்!
தேவா.
Comments
Post a Comment