மறந்தே போனது...!

மறந்தே போனது!

மாடு கட்டி போர்
அடித்தால் மாளாது-என
யானைக் கட்டிப் போர்
அடித்த-எங்கள்
மறவர் கூட்டம்!-அது
மறந்தே போனது!

மூன்று போக விளைச்சல் கண்ட
வீர மாயி-இன்று
ஒரு போக விளைச்சலுக்கு
வழி யில்லை
எலிக்கறி இங்கே
உணவாக-வேளாலர்
கூட்டம்!
நித்தம் பயிரிட்டு
தத்தம் போரிட்டு...
பாவத்திற்கு
போராட்டம் ரோட்டு
மேலே-கூட்டத்தோடு!
அது-
மறந்தே போனது...

வாகனத்தில் போக
வசதி யில்லை
பெட்ரோல் விலை
மலை யானதே(ன்)?!
பஸ்சில் பயணம்
மாணவர் கூட்டம்!
பஸ்சில் போக பயம்
பயணத்தை தள்ளிப்
போட்டது-மக்கள் கூட்டம்! -அது
மறந்தே போனது...

அரசியல் வியபாரம்
அசிங்க வாதிகள் ஏராளம்
ஆட்சியில்  பங்கு
அநிஞாயம் எங்கும்
ஊழலில் பேரம்
திட்டத்தில் லாபம்
பணியில் முடக்கம்
எல்லாம்
பதவில் அடக்கம்
மக்கள் நலனில்லை
இங்கு!
மறந்தே போனது-இது
மக்களாட்சி!

ஞாபகபடுத்திக் கொள்
நினைவுபடுத்திக் கொள்
நிலைநிறுத்திக் கொள்!
உனை திருத்திக் கொள்
திருந்த வழிச் சொல்
திருப்பி வலிக்கச் சொல்...
ஏன்யெனில்-இது
மக்களாட்சி!
ஆம்
நாம் மக்கள்!
அவ்வப்போது-அது
மறந்தே போனது...!

தேவா.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1