ஒர் அவசரத் தேவை
அது அவசியம் தேவை!
நம் நாடு நம்மினம்
நம் பிரச்சினை...
நாமே காப்போம்
நாட்டிற்கு நன்மை
சேர்ப்போம்!

காவிரி வெறும்
உரிமை பிரச்சினை
மட்டுமல்ல...
நம்முயிர் பிரச்சினை
வருங்கால வாரிசுகளின்
வாழ்வாதாரப் பிரச்சனை...
உரிமை மட்டுமே பெற்று
உயர்வ தெப்படி?
உரிமை வரட்டும்
மெதுவாக(ய்)!
அதற்கு முன்
தடுப்பணை பல
செய்வோம் !
நீர் தேக்த
நம்முயிர் காக்க
உயிரான இனம் காக்க!

ஒற்றை தலைவனை
உற்றத் தலைவனாக
தேர்ந்தெடுத்து...
பொறுப்பாளர்கள் பல
பொறியாளர்கள் சில(ர்)
பொருத்தமா திட்டம்
வகுப்போம்!
திடமாய் அதை
கட்ட வைப்போம்!
அரசியல் தேவையில்லை
அரசு தேவை இல்லை
ஆணை மட்டும் தரட்டும்...
தடை யில்லாமல்.
நிதிக்கு எங்கே போவது
நிதர்சனமான யோசனை
திட்டம் நிறைவேற
ஆண்டுகள் ஆகலாம்
ஆகட்டும்!
மாதம் ஒருநாள் ஊதியம்
ஒரு ஞாயிறு ஊழியம்
கொடையாய் கொடுப்போம்
அனைவரிடமும் கேட்போம்!
இருப்பவர் அள்ளிக்கொடுக்கட்டும்
இல்லாதவர்
கிள்ளிக்கொடுக்கட்டும்
இது பிச்சை யல்ல
பச்சை வளம் காக்க
நம் இச்சை...
நம்மால் முடியாதது
ஏதுமில்லை!
முயலாமலே சொன்னால் இயலாது தான்!

பூணைக்கு யார்
மணி கட்டுவது
நான் எழுத்தில்
முயற்சிக்கிறேன்
நீங்கள் எண்ணத்தில்
முயற்சியுங்கள்!

திரு சகாயத்தை
நாடுவோம்...
அதேப்போல் தரமான
பிறத் தலைகளை
தேடுவோம்
ஒன்றாய் கூடுவோம்!
அணைக்கட்டு அதற்கு
மெனக்கெட்டு...
குழுவாய் பலப்பட்டு!
வீணர்களை விலக்கிவிட்டு
வீரர்களை தேர்ந்தெடுப்போம்!
வீணாகும் நீரை யெல்லாம் இனி
நிலத்திலே ஊற
வைப்போம்!
புது மரஞ் செடி
வேர்வைக்க
உழவர் தன் ஏர்பிடிக்க
நிலத்தடியில் நீர் பிடிக்க
புதுக் கொடிப் பிடிப்போம்
கொள்கை படைப்போம்...
கூனாது நிமிர்ந்தே இனி
காரியம் படைப்போம்!
திருந்தாத பணந்திண்ணிகளை
போட்டு வுடைப்போம்!

புது காவிரி யையும்
புதுத் தமிழகத்தையும்
மீட்டெடுப்போம்!
தென்னக நதி சேர்ப்போம்
நல நிதி சேர்ப்போம்
நாமே அதற்கு
விதி சமைப்போம்!

மனமிருந்தால் மார்க்கமுண்டு
மதி யிருந்தால் மாற்றமுண்டு...
மற்றதும் உண்டு!
விதி இருந்தால்
இது விரைவில் நடக்கவும் வழிவுண்டு
அந்த வலிமையும்
நமக்குண்டு!
நம்பிக்கையில்
நன்றிவுடன்...
நானுமுண்டு!

தேவா.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1