பயந்து கிடக்கே...!
பயந்து கெடக்கே
மக்கா - மனம்
வியந்து கெடக்கே...
மக்கா!
பாவி யாகி
போனோமோ
நம்மில் பாதியாகி
போனோமோ!
கதறது இனம்
பதறதே மனம்
இன்னும் என்ன வாகப்போகுது
இனி என்ன வாழப்
போகுது!
ஆற்று நீருக்கு
அலரவிட்டு
செரிலைட் ஆலையில்
சிதறவிட்டு
கெயில் திட்டத்தில்
கதறவிட்டு
மீத்தேன் எடுக்க
மிரளவிட்டு
நீயூட்டினா யெடுக்க
நோண்டி கிட்டு...
விவசாயம் அழியுதே
விலைநிலம் காயுதே
விரட்டி விட வா
பார்க்க்குது நம்மை...
வீணா வாங்குது வம்பை!
நாம்-
பார்த்து வளர்த்த நிலம்
பயிராவ பார்த்தோம்
இல்லை-
உயிராய் அல்லவா
சேர்த்தோம்!
வீணர்களுக்கு வாக்களித்து
வீனாகிப் போனோம்!
இனியும் இதை
விளையாட்டாய்ப் பார்த்து விலகி யாப்
போவோம்!
இங்கு ஒன்னு
அங்கு ஒன்னு - திட்டம்
இதி தானா நடக்குதா
இல்லை
ஒன்னா சேர்த்து வைச்சு
சமைக்குதா...
சாகர் மாலா வேற
மசாலாப் போல சேர
இது
விரட்டி யடிக்கவா-நம்மை
துரத்தி யடிக்கவா!
படிப்பு போச்சு
மாணவன் செத்தான்
மீன் வளம்போச்சு
மீனவன் செத்தான்
விலை நிலம் போய்
வாரத நீருக்கு
விவசாயி செத்தான்...
மிச்சமிருக்கும்
தொழிழும்
சொச்ச மிருக்கிற
நாமளும் என்ன
செய்யப் போறோம்
ஏது செய்யப் போறோம்!
மண் யெல்லாம்
திட்டம் போட்டா
விண்ணிலா
பயிர் வைக்க!
தமிழ் நாட்டை
தனி நாடா
புறந்தள்ளி பார்க்குதா
அறந்தள்ளி கேட்குதா!
இதென்ன கரிசனம்
இத்துனை திட்டமும்
இங்கு மட்டுந்தானா?
அரசு ஆட்சேபனை இல்லை
அதிகாரிக்கு பலமில்லை...
நல்லவர்களும்
வல்லவர் களும்
எங்கே போனார்கள்
தரஞ் சொல்லியே
தள்ளிப் போனார்கள்!
நல்லவன் ஒதுங்கிப்
போனால்
பயங்கொண்டு பதுங்கி
போனால்
நன்மை சேராது
நன்னிலம் பயக்காது!
நாலும் தெரிந்தவர்கள்
படித்தவர்களே
பகுத்து வுரையுங்கள்
தொகுத்து உரையாடுங்கள்
எங்கள்
பயம் போக்கி
பிணி நீக்குங்கள்
யார் குற்ற மிது
வேதாந்தம் பேச வில்லை
வேதனை யில்
பேசுகிறேன்...
குற்றமெனில் தடுங்கள்
தவிருங்கள்
உற்றதாயின் உரக்க
உரையுங்கள்...
ஊருக்கு!
நாம் இழந்தது போதும்
இனி
நாடு இழந்து
நாடோடி ஆகுமுன்...
ஒடோடி வாருங்கள்!
நண்பர்களாய் பகிருங்கள்
நம்பிக்கை தெரிவியுங்கள்...!
பயந்து கிடக்கு
மக்கா
மனம் வியந்து கிடக்கு!
தேவா.
மக்கா - மனம்
வியந்து கெடக்கே...
மக்கா!
பாவி யாகி
போனோமோ
நம்மில் பாதியாகி
போனோமோ!
கதறது இனம்
பதறதே மனம்
இன்னும் என்ன வாகப்போகுது
இனி என்ன வாழப்
போகுது!
ஆற்று நீருக்கு
அலரவிட்டு
செரிலைட் ஆலையில்
சிதறவிட்டு
கெயில் திட்டத்தில்
கதறவிட்டு
மீத்தேன் எடுக்க
மிரளவிட்டு
நீயூட்டினா யெடுக்க
நோண்டி கிட்டு...
விவசாயம் அழியுதே
விலைநிலம் காயுதே
விரட்டி விட வா
பார்க்க்குது நம்மை...
வீணா வாங்குது வம்பை!
நாம்-
பார்த்து வளர்த்த நிலம்
பயிராவ பார்த்தோம்
இல்லை-
உயிராய் அல்லவா
சேர்த்தோம்!
வீணர்களுக்கு வாக்களித்து
வீனாகிப் போனோம்!
இனியும் இதை
விளையாட்டாய்ப் பார்த்து விலகி யாப்
போவோம்!
இங்கு ஒன்னு
அங்கு ஒன்னு - திட்டம்
இதி தானா நடக்குதா
இல்லை
ஒன்னா சேர்த்து வைச்சு
சமைக்குதா...
சாகர் மாலா வேற
மசாலாப் போல சேர
இது
விரட்டி யடிக்கவா-நம்மை
துரத்தி யடிக்கவா!
படிப்பு போச்சு
மாணவன் செத்தான்
மீன் வளம்போச்சு
மீனவன் செத்தான்
விலை நிலம் போய்
வாரத நீருக்கு
விவசாயி செத்தான்...
மிச்சமிருக்கும்
தொழிழும்
சொச்ச மிருக்கிற
நாமளும் என்ன
செய்யப் போறோம்
ஏது செய்யப் போறோம்!
மண் யெல்லாம்
திட்டம் போட்டா
விண்ணிலா
பயிர் வைக்க!
தமிழ் நாட்டை
தனி நாடா
புறந்தள்ளி பார்க்குதா
அறந்தள்ளி கேட்குதா!
இதென்ன கரிசனம்
இத்துனை திட்டமும்
இங்கு மட்டுந்தானா?
அரசு ஆட்சேபனை இல்லை
அதிகாரிக்கு பலமில்லை...
நல்லவர்களும்
வல்லவர் களும்
எங்கே போனார்கள்
தரஞ் சொல்லியே
தள்ளிப் போனார்கள்!
நல்லவன் ஒதுங்கிப்
போனால்
பயங்கொண்டு பதுங்கி
போனால்
நன்மை சேராது
நன்னிலம் பயக்காது!
நாலும் தெரிந்தவர்கள்
படித்தவர்களே
பகுத்து வுரையுங்கள்
தொகுத்து உரையாடுங்கள்
எங்கள்
பயம் போக்கி
பிணி நீக்குங்கள்
யார் குற்ற மிது
வேதாந்தம் பேச வில்லை
வேதனை யில்
பேசுகிறேன்...
குற்றமெனில் தடுங்கள்
தவிருங்கள்
உற்றதாயின் உரக்க
உரையுங்கள்...
ஊருக்கு!
நாம் இழந்தது போதும்
இனி
நாடு இழந்து
நாடோடி ஆகுமுன்...
ஒடோடி வாருங்கள்!
நண்பர்களாய் பகிருங்கள்
நம்பிக்கை தெரிவியுங்கள்...!
பயந்து கிடக்கு
மக்கா
மனம் வியந்து கிடக்கு!
தேவா.
Comments
Post a Comment