அன்னாந்து பார்ப்பர்
அடியில் இருப்பது மறப்பர்(துறப்பர்)
ஆளாய்ப் பறப்பர்
ஆவதில்லை மறுப்பர்!

எட்டாது கனிக்கு ஆசைப்பட்டு
கிட்டியதை இழப்பர்...
என்ன சொல்வது
பட்டத்து யானையும்
பரிவட்டமும்...
கண்ணுக்குத் தெரியும்!
பாகனும்
பரிதவித்து போனவனும்
கண்ணீல் படா
நெஞ்சைத் தொடா!

அவசர யுகத்தில்
அனுசரிப் பில்லை
அது சரி!
யா(நா)மே நமக்கு
பகை...
பொது நாட்டங் கொள்ள
ஏது வகை!

தேவா.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1