இன்னும் போதவில்லை யே...!

அவசர யுகத்தில்
பொறுமை யிழந்தோம்!
பொறுமை யின்றி
பொருள் யிழந்தோம்!

நெல்லுக்கு நாள் குறைத்து...
நல மிழந்தோம்!
மரம் அறுத்து
மழை இழந்தோம்!

விளைச்சலுக்கு ஆசைப்பட்டு
விதை யிழந்தோம்!
மகசூல் பெருக்கி
மகிமை யிழந்தோம்!

தேடலில் தொலைந்து
தேக மிழந்தோம்!
சோம்பேறி யாயிருந்து
பொறுப்பை யிழந்தோம்

நாடோடி வாழ்வில்
நட்பிழந்தோம்...
நாகரீக வாழ்வில்
நன்றி யிழந்தோம்!

தனிமையில் தங்கி
தன்னை யிழந்தோம்
ஆசையில் மயங்கி
மதி இழந்தோம்!

நிலம் மறைத்து
நீர் இழந்தோம்...
நிலை மறந்து
நிதி யிழந்தோம்!

போரிட மறந்து(பயந்து)
வீர மிழந்தோம்
கூட்டுறவு நாடா
பெருங் கூடு யிழந்தோம்

தீமைக்கு அஞ்சி
திமிர் யிழந்தோம்
தீராத காமத்தில்
காதல் இழந்தோம்!

வேறு பல கற்க
விளையாட்டை யிழந்தோம்...
போதை நோக்கி பயணத்தில்
பாதை இழந்தோம்!

தொலைக்காட்சி தொடர்பில்...
பொழுதை யிழந்தோம்
போறாத காலத்தில்
பொழைப்பை யிழந்தோம்!

வேதனைக்கு பயணப்பட்டு
வேர்வை யிழந்தோம்
தீரா மோகத்தில்
தனித் தமிழ் இழந்தோம்!

துரித உணவில்
சுவை யிழந்தோம்
மருத்துவர் நாடி
சுய மரணத்தை
 இழந்தோம்!

மாற்றம் வேண்டி
மன மிழந்தோம்
தனி மனிதனாய் ஒடி
மனித மிழந்தோம்!

பணந் தேடி
பன்பை யிழந்தோம்
சுகந் தேடி
சுய மிழந்தோம்!

இன்றியமையாததை
 நாடி
இறை
 இன்ப மிழந்தோம்!

தலைவனைத் தேடி
தலைமை இழந்தோம்!
இந்தியா வே இதுதானா
என-எண்ண மிழந்தோம்

என்ன இழந்தும்
என்னப் பயன்...
அனுபவம்
 போதவில்லை யே!

தேவா.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1