கல்வி கடனாய்....வேண்டாமே!

மனதார வேண்டுகிறேன்...
மனங் கொள்ள
வேண்டுகிறேன்!
நண்பர்களே
நல்லதை பகிர்வோம்
அப்படி யே
நம்பிக்கை யையும்!

கல்வியாண்டு
முடிந்தது-அடுத்த
கல்வி யாண்டு தொடக்கம்!
அதிலே-
நம் பொளைப்பும்
பொருளும் அடக்கம்!

போதிக்க போகுமிடத்தில்
பாதிக்கப் படுவது
நாம் தானே!
ஆசை வுண்டு
ஆளுக் கொன்றாய்...
அடித்தளம்  வேண்டும்
அதற்கு நன்றாய்!

ஆரம்ப கல்வி யாகட்டும்
ஆர்வ கல்வி யாகட்டும்
இனி-
அரசு பள்ளிகளில்
ஆர்வம் காட்டுவோம்!
தனியார் பள்ளி களை
தயவு செய்து
ஓரங்கட்டி ஒதுக்கவோம்
அல்லது ஒதுங்குவோம்!

நம் பொருள் ஈட்டலில்
பெரும்பாலும்
பொசுங்கி போவது
இவ்விடந்தான்!
பணத்தோடு பயனையும் இழக்கிறோம்!

தனியார் பள்ளி யை
தவித்து
அரசு பள்ளிகளில்
சேர்த்து-ஆவணஞ்
செய்வோம்!
தரத்திற்கு-
கேள்வி வரலாம்
தரம் உயர்த்துவோம்
தனியே பயிற்சி
வூட்டுவோம்...

தர மென்ற பெயரில்
பணத் தகுதி
இழந்தது தான் மிச்சம்!
சர்க்கரை பாகாய்
பிள்ளைகள்
அக்கறை கொள்ளுவோம்
இல்லை-
திரிந்து விடும்-பணத்தால் நம்(ன்)மை
பிரிந்து விடும்!

வளர்ச்சி வகுக்கப்பட
வேண்டும்
மலர்ச்சி காணப்பட...
அயர்ச்சி ஒன்று மில்லை
அசராதீர்!
தீர்க்க மாய் யோசியுங்கள்
எதை நோக்கி நாம்...
மனம் வாசியுங்கள்!

தேடல் தான்
வாழ் வெனில்
ஆரம்பம் எங்கே-என
தேர்ந்தெடுங்கள்!
நம் கஷ்டம் எதுவரை
எதற்கும் ஏங்கும்வரை!
காசில்லா கல்வி
ஏது இங்கே!
கல்விக்கே காசுபோனால்
வாழ வழிமுறை...

பிள்ளைகள் படிப்பு
வேண்டி-நாம்
எதையும் தொலைக்க
வேண்டாம்!
தவறாக வழி நடத்தி
நாம் தரந்தாழ்ந்தது
போதும்.
ஐந்து வயதில் கல்வி
அறம் வளர்க்கும்
மூன்று வயதில் கல்வி
முறை தானோ!
ஆரம்ப கல்வி
அரசுப் பள்ளி
தொழிற் கல்வி
கொஞ்சந் தள்ளி!

தொடக்க கல்வியில்
ஆரம்பியுங்கள்...
தொழில் கல்விக்கு
ஆதரவு யளியுங்கள்!
மொழி பழகுவோம்
அதில் தொழில்
பயில்வோம்!
கைத்தொழில் கற்றுக்கொள்ள
உயர்வு தாழ்வின்றி
உன்னதமாய்...
பிழைக்க கற்பதை விட
உழைக்க கற்ப்போம்!

வெளிவந்து வேதனையில்
சாவதைவிட
வேர் யறிந்து நீர்
பாச்சுவோம்!
கல்வி யும் நீரே
கண்ணாய் பாரீர்!

நல்ல கல்வி
நாம் காண்பது
நம்மை இழந்து
நன்மை காண்பதா!
நன்னெறி வூட்டி
நம்பிக்கைத் தருவோம்
தன்வழித் தேடி
தரணி ஆளட்டும்!

ஏழ்மை போக்க
எளிதாய் கற்ப்போம்
எளிதாய் கற்றே
இனிதாய் வாழ்வோம்!

தேவா.

Comments

Post a Comment

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1