அகல்யா!
அகலிகை!
அகலிகை!
அழகானவள் அறிவானவள் அடக்கமானவள்...
பிரமனின் நேரிடைப்
படைப்பானவள்!
பேரெழில் உருவம்
வில்லாய் புருவம்
வியப்பூட்டும் பருவம்
விரிந்த அதரம்
கச்சைக் கானாத தனம்
இச்சைக் கானும் தினம்!
ரிஷிபத்தினி-சுவைக்க
ருஷிவர்த்தினி!
மாமுனி - சினம்
அவரது மகா பிணி
கௌதம முனிவர்
அவளது இனியவர்!
துணைக்கு மட்டுமல்ல
அவரது பணிக்கும்
இணையானவள் இல்ல
மனையானவள் இளம்
மங்கையானவள் புனித
கங்கை போன்றவள்!
கற்புக்கு உவமையாய்
கணவனுக்கு கடமையாய் கானப்பட்ட
மடமை யவள்...
புடம் போடாத தங்கம்
குடம் தூக்கும் அங்கம்
அவளது வாழ்வில் ஓர் பங்கம்
மதி மயங்கா மாது
விதிக்கு இணை யாது!
பசிக்கு அஞ்சா நெஞ்சு சின்ன வயிறு
பழிக்கு அஞ்சிய பிஞ்சு
பெண் களிறு!
தேவ லோகத்து தலைவன் காம தேகத்தில் அலைபவன்
அவன்
கண்டான் அகலிகைய
இவன்
கொண்டான்
கௌதம முனி உருவம்
வென்றான்-
அவள் உடலேறி தின்றான்
காமம் பெரு(க்)கி
சென்றான்
அங்கிருந்து விலகி!
இது-
ஏதுமறியா முனி
எல்லாம் தெரிந்த சனி
திரும்பி வந்தார்
குளியல் பழகி!
புசிக்க உணவுண்டா
உடன் கொண்டா! -என
வினைவயப்படி வந்தார்
நின்றார் வியந்தபடி!
அகல் யா அரை மனுஷியா...
கண்மூடி கிறங்கி கிடந்தாள்-மேல்
நிழல் பட துயில்( கலைந்தாள்) இழந்தாள்
துள்ளி எழுந்தாள்...
தரை தொட்டது முழந்தாள்
மனம் சுட்டது
அழுதாள்,
நீங்களா....!?
மாரிலிருந்து நீங்காத கை
- மாசு கண்டது
இது ஒரு வகை!
சின்ங் கொண்டது முனி
சிவக்க கண்டது கண்மணி
ஈரம் காய்ந்தது ஜடாமுடி
மனம் அலைந்தது கண்டபடி
ஓயாது கோபம்-விட்டது
ஒரு சாபம்...
நீர் தெளித்து கடுஞ்
சொல் முளைத்தது
ஏ! பெண்ணே
ஆக கல் யாய் -நீ!
அகல்யா நீ
ஆக கல்லாய் இனி!
அவள் கல்-ஆனாலும்
அவன்தானே புருஷன்
இக்கதிக்கு அரசன்!
கருணைக் கொள் பதியே
நான் உன் வதியே-ஏன்
எனக்கு இக்கதியே!
தவறு ஏதுமறியேன்
கூறு நீ! நா அறிய
ஆற்றினாள் கண் நீர்
ஊற்றினாள்...
பதறினாள் மனம்
சிதறினாள்! சிந்தி நீ
வதையாதை என்னை
மீண்டும் சதையாக்கு
அதை சாதகமாக்கு
கண்ணே!
காதல் சொன்னாள் -அவன்
காதினில் சொன்னாள்
நான் உன்னவள்
உத்தமி சத்யம் நீ!
உனை யன்றி யாரையும்
தீண்டா பத்தினி பதில்
உரைத்தாள்...
பரதவித்தாள்!
நீ சொல்லாதே அப்படி
உன் ஆடவனுக்கும்
உனை அண்டியவனுக்கும்
ஆடை நீக்கிய கயவனுக்கும் கணவனுக்கும்
வித்யாசம் தெரியவில்லை
கரம் கோர்க்கையில்
சிரம் ஏற்கையில்
மனம் வேர்க்கையில்
மாற்றம் தெரியவில்லை
வேற்றான் நாற்றம்
அறியவில்லை
ஆ வென அலரவுமில்லை...
தப்பாய் போனவள் நீ
தப்பி போனவன் அவன்
யார் அது? அவன் ஊரெது?!
அய்யோ! அய்யனே
உனை தான் நான் அறிவேன்!
உண்மை தான்
நான் உரைப்பேன்!
வந்ததும் நீ - சுகந்
தந்ததும் நீ தான்
அவன் நீ இல்லை யெனில்
அவன் யார்?
நீ யார்?!
வந்ததது யார் -வந்து
இப்ப நிற்பது யார்?!
கொஞ்சம் உரைப்பாயோ
முரைப்பாரே!
கெஞ்சும் மொழி யில்
தஞ்சம் கேட்க...
நெஞ்சு ஆற்றினார்
சஞ்சலம் கலைந்தார்
தன்நிலை யடைந்தார்
கௌதமர்!
கண்மூடி ஞான கண்
திறந்தார்
வந்ததது யார்
தன்னை மறந்தார்!
விண்ணை தொட்ட அவன்-வீடு
போய்ச் சேரவில்லை
விருட்டென அழைத்தார்
கமண்டல நீரில்
கை நனைத்தார்
காரி உமிழ்ந்தார் -கய வா
இந்திரனே காம எய்ந்திரனே!
தோற்றம் மாறி வந்தாயா
தோட்டம் மாறி
வந்தாயா?
எம் பூவைப் பறிக்க!
தீயை தீண்டிய தேதகம்
நீ ஓடிய வேகம்-
எல்லை இல்லா மோகம்
ஒழியட்டும் உன் சேட்டை
அதற்கு ஊதியமாகட்டும்
ஆயிரம் ஓட்டை...
கண்ணாய் ரண
புண்ணாய் -உன் தேக
மெங்கும் தஞ்சமாகும்
தேக பசிக்கு வஞ்சமாகும் - இனி
பிறமணை(வி) தீண்டாது இருக்கட்டும்
உன் படி தாண்டாது நிற்கட்டும்! இது
கௌதமரின் கோபம்
இந்திரனின் பாவம்!
ஆனது(தே) அப்படி
அகலிகை நின்றாள்
அழுதபடி கல்லாய்!
உன் கோபம் சரி
ஏன் சாபம் எனக்கு
விவரி ...!
மீட்டித்தா என்னை
மீட்ட வா அன்பே!
இது பெண் பாவம்
பொல்லாது-நகராதே
பதில் சொல்லாது!
விம்மி வுரைத்தாள்
பம்மி முறைத்தாள்
அம்மி மிதித்தவள்
வெம்பி குதித்தாள்...
பத்தினியே எத்தினி முறை தீண்டிருப்பேன்
உனதன்பு வேண்டி யிருப்பேன்! மாறா காதல் கொண்டிருப்பேன்.,.
நான் விட்டது
விட்டதுதான் சாபம்!
நீ கெட்டது கெட்டதுதான்
அது பாவம்! இருந்தும்
இது விலகும்
பின்னொரு நாளில்...
மாதவன் ஒருவன்
ரகு குல ஆதவன்
அவன் சந்திரனை பின்
சேர்த்து நாமத்தை முன்
வைத்து வருவான்
பாக்கியவான்-அவன்
பாதம் படும் உன்மீது
இச் சாபம் விடும் அத்தோடு!
பாக்கித் தருவான்-சாப
போக்கித் தருவான்-முழு
உருவத்தை ஆக்கித்
தருவான்!
விழிப்போடு பாத்திரு
வலியோடு காத்திரு
அவன் கால் படும்
காலம்வரை கல்லாய்!
அகல் யா!
என் நம்பிக்கை வானில்
நட்சத்திரமாவாய்
நா தழுக்க வாய் மணக்க
மனம் உருகினார் அவ்
விடம் விழகினார்
கௌதம முனி!
அகலிகை கல் யானாள்
ராமர் பாதம்பட்டு
உயிரானாள் புதிதாய்
உருவானாள் உயர்வானாள்...
வின்மீனாய் நன்மானாய்
மேதகு பெருமை
அம் மாதரின் பொறுமை!
அகலிகை
அகல் யா அத் தகை!
தேவா.
அகலிகை!
அழகானவள் அறிவானவள் அடக்கமானவள்...
பிரமனின் நேரிடைப்
படைப்பானவள்!
பேரெழில் உருவம்
வில்லாய் புருவம்
வியப்பூட்டும் பருவம்
விரிந்த அதரம்
கச்சைக் கானாத தனம்
இச்சைக் கானும் தினம்!
ரிஷிபத்தினி-சுவைக்க
ருஷிவர்த்தினி!
மாமுனி - சினம்
அவரது மகா பிணி
கௌதம முனிவர்
அவளது இனியவர்!
துணைக்கு மட்டுமல்ல
அவரது பணிக்கும்
இணையானவள் இல்ல
மனையானவள் இளம்
மங்கையானவள் புனித
கங்கை போன்றவள்!
கற்புக்கு உவமையாய்
கணவனுக்கு கடமையாய் கானப்பட்ட
மடமை யவள்...
புடம் போடாத தங்கம்
குடம் தூக்கும் அங்கம்
அவளது வாழ்வில் ஓர் பங்கம்
மதி மயங்கா மாது
விதிக்கு இணை யாது!
பசிக்கு அஞ்சா நெஞ்சு சின்ன வயிறு
பழிக்கு அஞ்சிய பிஞ்சு
பெண் களிறு!
தேவ லோகத்து தலைவன் காம தேகத்தில் அலைபவன்
அவன்
கண்டான் அகலிகைய
இவன்
கொண்டான்
கௌதம முனி உருவம்
வென்றான்-
அவள் உடலேறி தின்றான்
காமம் பெரு(க்)கி
சென்றான்
அங்கிருந்து விலகி!
இது-
ஏதுமறியா முனி
எல்லாம் தெரிந்த சனி
திரும்பி வந்தார்
குளியல் பழகி!
புசிக்க உணவுண்டா
உடன் கொண்டா! -என
வினைவயப்படி வந்தார்
நின்றார் வியந்தபடி!
அகல் யா அரை மனுஷியா...
கண்மூடி கிறங்கி கிடந்தாள்-மேல்
நிழல் பட துயில்( கலைந்தாள்) இழந்தாள்
துள்ளி எழுந்தாள்...
தரை தொட்டது முழந்தாள்
மனம் சுட்டது
அழுதாள்,
நீங்களா....!?
மாரிலிருந்து நீங்காத கை
- மாசு கண்டது
இது ஒரு வகை!
சின்ங் கொண்டது முனி
சிவக்க கண்டது கண்மணி
ஈரம் காய்ந்தது ஜடாமுடி
மனம் அலைந்தது கண்டபடி
ஓயாது கோபம்-விட்டது
ஒரு சாபம்...
நீர் தெளித்து கடுஞ்
சொல் முளைத்தது
ஏ! பெண்ணே
ஆக கல் யாய் -நீ!
அகல்யா நீ
ஆக கல்லாய் இனி!
அவள் கல்-ஆனாலும்
அவன்தானே புருஷன்
இக்கதிக்கு அரசன்!
கருணைக் கொள் பதியே
நான் உன் வதியே-ஏன்
எனக்கு இக்கதியே!
தவறு ஏதுமறியேன்
கூறு நீ! நா அறிய
ஆற்றினாள் கண் நீர்
ஊற்றினாள்...
பதறினாள் மனம்
சிதறினாள்! சிந்தி நீ
வதையாதை என்னை
மீண்டும் சதையாக்கு
அதை சாதகமாக்கு
கண்ணே!
காதல் சொன்னாள் -அவன்
காதினில் சொன்னாள்
நான் உன்னவள்
உத்தமி சத்யம் நீ!
உனை யன்றி யாரையும்
தீண்டா பத்தினி பதில்
உரைத்தாள்...
பரதவித்தாள்!
நீ சொல்லாதே அப்படி
உன் ஆடவனுக்கும்
உனை அண்டியவனுக்கும்
ஆடை நீக்கிய கயவனுக்கும் கணவனுக்கும்
வித்யாசம் தெரியவில்லை
கரம் கோர்க்கையில்
சிரம் ஏற்கையில்
மனம் வேர்க்கையில்
மாற்றம் தெரியவில்லை
வேற்றான் நாற்றம்
அறியவில்லை
ஆ வென அலரவுமில்லை...
தப்பாய் போனவள் நீ
தப்பி போனவன் அவன்
யார் அது? அவன் ஊரெது?!
அய்யோ! அய்யனே
உனை தான் நான் அறிவேன்!
உண்மை தான்
நான் உரைப்பேன்!
வந்ததும் நீ - சுகந்
தந்ததும் நீ தான்
அவன் நீ இல்லை யெனில்
அவன் யார்?
நீ யார்?!
வந்ததது யார் -வந்து
இப்ப நிற்பது யார்?!
கொஞ்சம் உரைப்பாயோ
முரைப்பாரே!
கெஞ்சும் மொழி யில்
தஞ்சம் கேட்க...
நெஞ்சு ஆற்றினார்
சஞ்சலம் கலைந்தார்
தன்நிலை யடைந்தார்
கௌதமர்!
கண்மூடி ஞான கண்
திறந்தார்
வந்ததது யார்
தன்னை மறந்தார்!
விண்ணை தொட்ட அவன்-வீடு
போய்ச் சேரவில்லை
விருட்டென அழைத்தார்
கமண்டல நீரில்
கை நனைத்தார்
காரி உமிழ்ந்தார் -கய வா
இந்திரனே காம எய்ந்திரனே!
தோற்றம் மாறி வந்தாயா
தோட்டம் மாறி
வந்தாயா?
எம் பூவைப் பறிக்க!
தீயை தீண்டிய தேதகம்
நீ ஓடிய வேகம்-
எல்லை இல்லா மோகம்
ஒழியட்டும் உன் சேட்டை
அதற்கு ஊதியமாகட்டும்
ஆயிரம் ஓட்டை...
கண்ணாய் ரண
புண்ணாய் -உன் தேக
மெங்கும் தஞ்சமாகும்
தேக பசிக்கு வஞ்சமாகும் - இனி
பிறமணை(வி) தீண்டாது இருக்கட்டும்
உன் படி தாண்டாது நிற்கட்டும்! இது
கௌதமரின் கோபம்
இந்திரனின் பாவம்!
ஆனது(தே) அப்படி
அகலிகை நின்றாள்
அழுதபடி கல்லாய்!
உன் கோபம் சரி
ஏன் சாபம் எனக்கு
விவரி ...!
மீட்டித்தா என்னை
மீட்ட வா அன்பே!
இது பெண் பாவம்
பொல்லாது-நகராதே
பதில் சொல்லாது!
விம்மி வுரைத்தாள்
பம்மி முறைத்தாள்
அம்மி மிதித்தவள்
வெம்பி குதித்தாள்...
பத்தினியே எத்தினி முறை தீண்டிருப்பேன்
உனதன்பு வேண்டி யிருப்பேன்! மாறா காதல் கொண்டிருப்பேன்.,.
நான் விட்டது
விட்டதுதான் சாபம்!
நீ கெட்டது கெட்டதுதான்
அது பாவம்! இருந்தும்
இது விலகும்
பின்னொரு நாளில்...
மாதவன் ஒருவன்
ரகு குல ஆதவன்
அவன் சந்திரனை பின்
சேர்த்து நாமத்தை முன்
வைத்து வருவான்
பாக்கியவான்-அவன்
பாதம் படும் உன்மீது
இச் சாபம் விடும் அத்தோடு!
பாக்கித் தருவான்-சாப
போக்கித் தருவான்-முழு
உருவத்தை ஆக்கித்
தருவான்!
விழிப்போடு பாத்திரு
வலியோடு காத்திரு
அவன் கால் படும்
காலம்வரை கல்லாய்!
அகல் யா!
என் நம்பிக்கை வானில்
நட்சத்திரமாவாய்
நா தழுக்க வாய் மணக்க
மனம் உருகினார் அவ்
விடம் விழகினார்
கௌதம முனி!
அகலிகை கல் யானாள்
ராமர் பாதம்பட்டு
உயிரானாள் புதிதாய்
உருவானாள் உயர்வானாள்...
வின்மீனாய் நன்மானாய்
மேதகு பெருமை
அம் மாதரின் பொறுமை!
அகலிகை
அகல் யா அத் தகை!
தேவா.
Comments
Post a Comment