இதை மறப்போமே ஆனால்- மன்னிப்பில்லை நமக்கு

மனித உயிர்களுக்கு
விலை இல்லை...
யார் சொன்னது?!
நிர்ணயத்து விட்டார்கள்
விற்பனை பிரதிநிதிகளும்
கூட லேபல் யில்லா
 மார்கெட்டிங் ...!

பிணம் தின்னும் கழுகுகள்...
படித்தோம்! - அதில்
(அதை)பணம் பன்னும்
வல்லூர்கள்...
பதறுகிறோம்!
நடந்து முடிந்ந விசயத்திற்கல்ல
-இறந்து போன
முதியோருக்காக அல்ல
மறந்து போன மனிதம்
இன்று
 மரணித்தும் போனதா...!

மனித உடல் மண் திங்கும்
சுடலை பிணத்தில்
 பணம் பன்னும்
பேராசை பேய்கள்!
இவர்களை எத்தோடு ஒப்பிடுவது ஒப்பற்றவர்கள் தரமற்ற
வாழத் தகுதியற்ற
ஈனர்கள்...
இறக்கமற்று நடமாடும்
சவங்கள்
சவப்பிணங்கள்...

அநாதைகளும்
ஆதரவற்றவர்களும்
உம்போல்
 அருகதையற்றவர்கள் அல்ல!
உத்திரமேரூர் பாதிரிகளும் அவர் மாதரிகளும்...
ஈன இழி ஜென்மங்கள்
பாவச்சின்னங்கள்!
பாவத்தின் சம்பளம்
படைத்தவனுக்கு தெரியும்-
உனக்கும் கிட்டும்
உண்மை ஊமையாய் மட்டும்!

ஊடகங்களும் ஊதாரி
கூட்டங்க ளும்
வேடதாரி பட்டங்களுடன்
மனம் ஊனமாய் போனது ஏன்?!
இன்னும்-மௌனமாய்
 இருப்பது(ம்) ஏன்?

அண்டை மாநிலத்தில்
பக்கத்து நாட்டில் சண்டையில் செத்தாலும் சடுதியில்
செத்தாலும்
இனம் காக்கும் போராளிகள் குரல் கொடுக்கும் கோமாளிகள்...
வெற்று உரைப் பேச்சு
வீரகை வீச்சு
எங்கு போனது!
செத்தது உம் இனம் இல்லை யா...
இது தமிழ் அகம் இல்லை யா! பேசப் (பணம்) மனம் வரவில்லையா?!

செத்தது எம் சொந்தம் நம் பந்தம்

இத்துரோகிகளுக்கு
உடன் சென்றாலும்
 துணை போனாலும்
இனத் துரோகிகளே!

ஈழத்  தமிழர்களுக்கு கூட ஈரமுண்டு இங்கு
ஆனால்-
 இனத் தமிழனக்கு
 அதில் இடமில்லை!

தன் தாயை காக்க தகுதி
அற்றவன்
மாற்றான் தாயை

  •  போற்றுவது ஏனோ

ஏன்?

தேவா.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1