முதல் நாள்...

சித்திரைத் திங்கள்
சிரித்திடுங்கள்...
நீங்கள்!

சிந்தியுங்கள்
சினந் தவிர்த்து!
சிறக்கச் செய்யுங்கள்
மனம் உரக்கச்
சொல்லுங்கள்!!

வெல்லுங்கள் காலத்தை(தே)
கவர்ந்து
கொள்ளுங்கள்!
நிமிர்ந்தே நில்லுங்கள்...
நேர்பட நேசியுங்கள்!

இன்பம் இதுவென்று
அள வுண்டோ
இயல்பாய் ஏற்க
தடை வுண்டோ!
பணத் தீயின் மகிமை
மனந் தன்னை-மனிதனை
எரிக்கும்!
பக்குவமாய் பார்த்தால்
பல்லாண்டு சிறக்கும்!

வேண்டுதல் தேட
வேண்டியவை நாட
பிராத்தியுங்கள்...
கிடைத்தால் பக்கபலம்
கிடைக்காது போனால்
பலமான பக்குவம்!

நிம்மதி எங்குண்டு
வெண்மதிப் போல்
நம்மில் கண்டு(உண்டு)
வெளிப் பார்வை
வேசம் வேண்டாம்
சுயப் பார்வை
சொர்க்கம் சேர்க்கும்!

எல்லாமே நம்முள்
இருக்க...
நாம் மட்டும் ஏன்
இரண்டாக! (இருக்கோம்)
சுகமென்று எதுவெனில்
தேக நலந்தான்
அதென்பேன்!

நாளும் மாறும்
கோளும் மாறும்
நாமும் மாறினால்
நல்லது மாறுமா!
நன்றி யென்பது
நம்பிக்கை தருவது...

படைத்தவன் இருக்க
படைத்ததும் இருக்க
பாழாக்கிப் போகலாமா..
ஏதெனும் புதியவை
படைக்காமல்
போகலாமா!

பிறந்த பலன்
திறந்து பாரும்...
வருந்தாமல் இருந்தாலே
வாழ்வில்(ன்) வசந்தம்
பேரின்ப பெருஞ்சுடர்...
ஒளி தரும்!
வழி விடும்!

அர்த்தத்தோடு ஆவணச்
செய்வோம்...
ஆணவத்தை ஆகாது
செய்வோம்!
இது-
போகாத ஊருக்கு
வழி யில்லை...
பொருமைக்கு நிகர்
கடல் இல்லை!

வாசித்துப் பார்ப்போம்
நிதானமாய்...
வசித்துப் பார்ப்போம்
நிதர்சனமாய்!
மறவா திருப்பது
உயர் வன்று...
மறப்பதும் - நம்
உயர்வுக்கு நன்று!

மாறா திருப்பது
ஏதுமுண்டோ
இம் மண்ணீல்...
பின் - மயக்க மென்ன
தயக்க மென்ன
இயங்கி போகும்
இயந்திர வாழ்வில்...!

இனி இனிதாகட்டும்
இது நனவாகட்டும்
சுகம் நடமாடட்டும்
அகம் தடமாகட்டும்!
எல்லாம் நன்மைக்கே
அது என் நம்பிக்கை!

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
இருந்தும்-இருக்கட்டும்
தமிழர் புத்தாண்டு
தைத் திங்கள் தானே!
தை  முதல் நாளே!
வாழ்க வளமுடன்
நலமுடன் சுகமுடன்
என்றும்!
என்றென்றும்
அன்புடன்
தேவா.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1