காமம் எனக்குள்...!

காதல் சொன்ன
உத்தியில்
காமம் எனக்கு மத்தியில் - அல்ல
புத்தியில்!
அதனால்-
புருவத்தி லேற்றி
புழுங்க விடுவதில்லை!
இருந்தும்
சில நேரங்களில்
மாற்றுத் திறனாளியாய்
தவிப்ப துண்டு...
தடுப்பது முண்டு!

மனசறியும் மாண்பு
மரணித்து அழியுமா
மறந்தால் ஒழியுமா!
வழி யெதுவே வாழ்வது...
பாதை கேற்ப பயணமா
பயணத்திற் கேற்ப
பாதையா!
கண் டொழிக்க மேதையில்லை -இது
கழன்று யகலும் போதை!

தேவைக்கு இருந்தும்
தேவையாய் மருந்தும்
தேடும் விருந்தும்...
இருந்து விட்டு போகட்டும்!
இல்லாமலே போனால்
இயல்பாக முடியுமா!?
இயற்கைக்கு எதிர்
புரிந்தும் அது - புதிர்!

கிளர்ந் தெழும் மனம்
களத்தில் இல்லை
ஆனால்-
காரியம் செய்யும்!
தவிக்குது நெஞ்சம்
தவிர் த்தது கொஞ்சம்
தடைக்கு மிஞ்சும்
விடைக்கு அஞ்சும்...
சொல்லும் செயலும்
வேறாகி
உணர்வுக்கு ஊற்றே
பழியாகி
உணர்தலை அதற்கு
வழியாகி
ஊருக்குள் அதை
மொழியாக்கி
உத்தமனாய் காட்டும்
உத்வேகம்...
மனப் போர்வை நீக்கி
பார்த்தால் உள்மனம்
கண்சிமிட்டும்!

நல்லவனாய் இருப்பதும் - ஏதும்
நடவாது இருப்பதாலே!
என்னசெய்வது
உன் கஷ்டகாலம்
இதை
கடந்தாக வேண்டும்!

தேவா.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1