கருவறை கதறல்...!
கருவறை!
இது-காணாது யாருமில்லை...
கண்டதாய் நினைவுமில்லை!
நிலைத்து நிறந்தரமில்லை
என் நிம்மதி குறைந்ததுமில்லை!
முத்தாய் முளையாய் மொட்டாய் சொட்டாய்...
தொடக்கம் அங்கே
அகரமாய்..
ஆணந்தமாய்
சொல்வதற்கு அறியபட
வில்லை-நினைவு
தப்பின தினங்களை
அதிகம்!
வாழ்ந்தது ஒருமுறை
வகை அறியா வழிமுறை!
ஆதிவுரை இறுதிவரை
கானாது மறு கரை!
பிறைக்கானா இடம்
ஒளிக்கானா மடம்
குரைவான விடமானதால்
குகையானதே!
மிகை வொன்றுமில்லை
எடுத்துச் சொல்ல-அது
மியூசியம் போல் அல்ல!
மிருதுவான தடம்
தீபகர்பமாய் நீர்சூழ
மெல்லிய திசுவோடு
சிசுவாய்...!
உருவான காலம்முதல்
உத்திரவாதம் இல்லாமலே போச்சு!
ஆறுமாதம் காலம்
அறுபது நாள் ஓலம்...
நஞ்சோடு கொஞ்சியே
நலஞ்சேர்த்தே
உவமையாய்
ஊமையாய் உயிரோடு
நிலையாய்
ஏதுமறியா எதுவும்
தெறியா நான் யாகிய
வேளையில் வேதனையின்
வலி-அதன் ஒலி மட்டும்
ஒலித்துக்கொண்டே...
கண் யிருந்தும் பார்க்காமல்
வாயிருந்தும் பேசாமல்
கைக்கால் கட்டி வைத்த
கதியாய்!
வெளிச்சத்தம் ஒலி
கேட்கும்-உண்மையா
நன்மையா உணரா(மல்)
செவி கேட்கும்!
விரிசல் யின்றி விரிவாக்கம்
உரசல் இன்றி உயிர் ஆக்கம்
ஒரு குழல் வழியே
தொடரும் கொடி வழியே
தொந்தரவு யில்லா-ஒரு
தொய்வு இல்லாத் தொடர்பு!
நித்தமாய் சுத்தமாய்
சித்தமாய் இருந்தாலும்
சிவந்து இருந்தேனோ
என்னவோ - ஆனால்
சினந்து இருந்தேன்
சுத்தமாய் மூன்று கிலோ!
நாற்பது வார ஆட்சி
உயிர் துடிப்பு ஒன்றே
சாட்சி...
நாநூறு வருடமாய் போச்சு!
ஒடுங்கி விரிந்த-திருப்பி
போட்ட குவளையாய்
ஒர் உள் உறுப்பு
காத்திடும் சேர்த்திடும்
ஒரு உயிர் பிறப்பு!
கருப்பை கர்பபை
கட உள் வாழ(ம்)
கருவறை!
அது கற்பு முறை-அங்கு
ஏற்புரை மட்டுமே!
எனை யறியாது
நினை வறியாது-வேறு
தெரியாது...
நித்திரைக்கு உகந்த இடம்
உதிரத்தோடு உறங்கிய
இடம் - அது உசந்த இடம்!
வலி பிறந்தது
வாயல் திறந்தது...
கடைசியாய் கேட்டது
ஒரு கதறல் லின்-ஒலிச்
சிதறல் மட்டுமே...!
தேவா.
Comments
Post a Comment