இனி ஒரு விதி செய்வோம்!

இனி ஒரு விதி
செய்வோம்!
அதை மதியால்
முடிவு செய்வோம்...
கண்ணீரையும் தண்ணீரைம்
வீணாக்குவதில்லை!
நெகழியையும் அதன்
நிழலையும் நிராகரிப்போம்!
அந்நிய பானத்தை
அருந்தாது ஒழிப்போம்!
(ஒதுக்குவோம்)
உள்நாட்டு பானத்தை
உயர்வாய் போற்றுவோம்!
பாக்கெட் தீனியை
பக்குவமாய் ஒதுக்குவோம்!
பற்றயற்ற வாழ்வை
ஒப்பற்று ஒழுகுவோம்!
அந்நிய மோகந்தனை
அழிந்தது யென உணர்வோம்!
கட்டாய இலவசங்களை
கசந்ததென ஒதுக்குவோம்!
வாழ் வதாராமாய்
வயல்தனை(விவசாயம்) உயர்த்துவோம்!
தும்பை விட்டு வால்
பிடிக்கும் செயலை
ஒருபோதும் செய்யோம்!

கல்வி கட்டண உயர்வு
அங்கு கல்லாது ஒதுங்குவோம்!
அரசு கல்வியில் இனி
ஆதாயம் தேடுவோம்!
(தரம் உயர்த்தி)
தேவைக்கு தவிர-இனி
தேடுதல் குறைப்போம்!
சாதிக்கா(ன)த அரசுதனை இனி
சாடி வுரைப்போம்!

வெள்ளைச் சர்க்கரை
வெறுஞ் சாதி சேர்க்காது இ்ருப்போம்!

சாவோ நோவோ- அரசு
மருத்துவம் பார்ப்போம்!
உழலுக்கு போர்வையும்
நேர்மைக்கு சால்வையும் போர்த்துவோம்!
நம்(ன்)மை உயர்த்தாத
அரசை இம்மை
உயராது தடுப்போம்!

மண்ணின் மைந்தர்களை
மறவாது இருப்போம்!
அறந்தவறும்
அரசியல் வாதிகளை
அடியோடு அனுகாது
தவிர்ப்போம்!
வீணர்களை நம்பி வீழ்ந்தது போதும்...
வீருகொண்டு எழுவோம்
வீரத்தமிழனாய்!

ஒரு நாள் பேருந்து தவிர்
வாரம் இரு நாள் பெட்ரோல் தவிர்!
மாதம் இருநாள் வங்கிக்கு போகதே
சினிமா ஒரு நாள்
பெருங்காடி ஒரு நாள்
ஒருநா தொலைக்காட்சியை
விடுமுறையாய் தவிர்!
தங்கம் ஒரு நாள்
தகரம் ஒரு நாள்
அந்நிய பொருளை அறவே வாழ் நாள்!

வர்த்தகம் மங்கட்டும்
வரிக்கு-அரசு
நம்மிடம் தொங்கட்டும்!
தொடங்கட்டும்-இது
தொடரட்டும்
தொந்தரவில்லா-தினம்!
ஒவ்வருத்திராய் இல்லை
ஒற்றுமை யாய் நின்று
வேற்றுமை அகன்று
வேர் பிடிப்போம்-நன்று
இவர்களை வேர் அறுப்போம் அன்று!

வேடிக்கை அல்ல
நண்பா!
வேதனையில் சொல்கிறேன்.நம்
தலைமுறை காப்போம்
முன்னோர் பெருமை சேர்ப்போம்!
இழிப் பிறவிகள் இல்லை யென்று. ஆக்குவோம்!
இந்திய ஜனநாயக
இறையான்மை காப்போம்!
இவ்வியங்களை இல்லாது
செய்வோம்!
இல்லறம் மட்டும் நமக்கில்லை-இனி
இதை நல்லறமாக
நன்றியுடன் செய்வோம்!
ஆணவ அதிகாரத்தையும்
அசிங்க அரசியலையும்
அடியோடு வேர் சாய்போம்!
சிந்தீப்பிர் நம் எதிர்க்காலம்
சந்திப்பீர் இனி
எதிர்க்கும் காலம்!
இதற்கு
வேண்டியது பொதுநலம்
நாம் வேண்டுவது
நம் ஒற்றுமை யின் பலம்!

தேவா.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1