சம்மர்-ஐ சமாளி

வெயில் காலம்
வந்துவிட்டது
வேர்க்குது வெம்பி...
உள்ளுர் பானமெல்லாம்
தந்துவிட்டது
உன்னையே நம்பி!

அருந்திப் பாரீர்
ஆதரவு தாரீர்
அருகதை யற்ற
அந்நிய பானம்
அரவே தவிர்த்து
அருந்துவோம்-நம்
மண்ணின் பானம்!
காப்போம்-நம்(அம்)
மக்களின் மானம்!

பனை யோலை யேந்தி
பதநீர் யருந்தி
நுங்கு நோண்டி
ஞளிர்ச்சி வேண்டி...
பனைப் பொருட்களை
பயன்படுத்தவோம்
வெள்ளரி பிஞ்சு
அதிலேது நஞ்சு...
தர்பூசணியும்
தாராது ஒர் சளியும்!
கரும்புச் சார்-அருந்தி
விவசாய கஷ்டம் பார்!
நன்னாரி சர்பத்தும்
நான் யறிந்த
அற்புதமும்...
எலுமிச்சை சாரு
அதன் லெவல் வேறு!

இஞ்சி மா உப்பு-சேர்த்த
மோருக்கு மிஞ்சி
வேறேது(ம்) எஞ்சி!
மண்பானை நீரும்
மனசெல்லாம் குளிரும்!
மதிய வெயில்
மண்டைய பிளக்கும்
கெண்டையை இழுக்கும்...
மயங்கிடாதே
மறந்து விடாதே
நீர் பருக!

சீரக நீரும்
சிறுவெங்காயம்
சிறுதானிய கூழும்
சிறுநீரக த்திற்கு
சீராய் சேரும்!
அகத்திக் கீரை
அனல் குறைக்கும்
மனத்தக்காளி
வாய் வயிறு மனங்
குளிருட்டும்!

கற்றாழை சதை
காரியம் செய்யும்
வெந்தயம் உடற்
சூட்டைக் குறைக்கும்!
சத்தானது இங்குண்டு
அந்நிய மோகத்தில்
சாய்ந்திடாதே...
அகங் கொன்று!

இருவேளை குளித்தலை
இயல்பாய் கொண்டு
இனிமையாய்
துன்பம் நீக்கி
இளமை சேர்ப்போம்!

சுகமானது
சொல்லிலுண்டு
நகைப்பது நல்
மருந்தாய் கண்டு!
விடாது இயற்கை யை
(கெடாது) விரட்டாதுப்
பார்ப்போம்...
இயன்றளவு இறையாய்
காப்போம்!
இயற்கை உணவை(வே)
இனியாகிப் போனால்
இரைப்பை காக்குமே
நாடா மருந்தாய்
நம்மை!

தேவா.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1