முந்திரிக் காட்டுத்
தோப் பிலே...
முள்வெளி ஏதுமில்லை
முன் மதிய வேளையிலே...
விழுந்த பழ மெடுக்க
அந்த-
இழந்தபழ சிகப்பே!
இரு-
மாதுளை ஒருசேர
கழுத்தோர முகப்பே!
காதோர
கருத்த முடியும்
எருக்ஞ் செடியும்
அருகருகே கண்டேன்!

நீ-குனிந்தெடுக்கும்
வேலையில் கண்
துளைத்தெடுக்கும்...
வொ முகப்புச் சீலை
விலகும் போதெல்லாம்
யென் முகரயை
எங்க வக்கே...!

பாயப் போட்டு
படுக்கல னாலும்-மனம்
மேயவிட்டு படுத்தது புள்ள...!
தடித்த உதடும்-யது
கொடுத்த அசைவும்
உப்பில்லா கஞ்சிக்கும்
ஊறுகா யாச்சு...
(அசைவ மாச்சு)
கருத்த மனம் கறை
படிஞ்சிப் போச்சு-விழுந்த பழம் உன்
மடிநெரஞ்சு போச்சு!

பெருத்த வயிறு
இடையில் திரித்த கயிறு
இட மடிப்பு ரெண்டுக்கும்
கெண்டைக்கால் தண்டைக்கும்...
எழுதி வெக்கலாம்
தோப்பு! - எனக்கு
தோதில்லயே மாப்பு!
ஒன்னப் போலத்தான்
இந்த தோப்பும்...
பாக்கமட்டும் வசதி யிருக்கு
தோப்புக்காரன் அசலூரு
ம்ம்ம்...
நா இன்னும் உசிரோடு!


தேவா.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1