வைகரை வருத்தம்!

வைகரை வருத்தம்...!

வைகரையோரம்
வயதான நாணல் ஒன்று
 வருத்தமாய்
நின்றது!
கண் யழுது
கலை யிழந்து...
தலை குனிந்து!

தலை குனியும் நாணலே
கண்ணில் ஏன் வீக்கம்
கரையில் என்ன தாக்கம்
தாழ்ந்து வினாவினேன்
தாமதமாய் பதில் வ(த)ந்தது!

நண்பா-
தாகத்தில் நா இருக்கேன்
தர்க்கத்தில் நீ இருக்க...
மோகத்தில் உம் பேச்சு
சோகத்தில் எம்மூச்சு
பாவம் செஞ்சது நீ
சாபம் பெற்றது நா!
நன்றி மறந்தவன் நீ
அன்றி
செய்யாதவன் நான்!
நாணல்தான் நா
நானுவேன் சில நேரம்
இப்ப-கூனிக்
குன்னுகிறேன் பல காலம்...

கரையோரம் என் இனம்
காணாமல் பன்னியது
உன் இனம்!
வேகுது என் மனம்
வெப்பத்தில் உன் இனம்!

என் வேதனைகள்
 வேறு மாதரி...
இங்கிருந்த அழகும்
அரணும் எங்கே?!
வரும் வழியில் பாலம்
பார்த்திருப்பாய்-
அதன் மேல் நின்றால் இருகரையெல்லாம்
என் முகம்!
இங்கிருந்த ஆறு எங்கே
அதன் வளமெங்கே-என்
நலஞ் சொன்ன பேர் எங்கே?
கழிவு நீர் கால்வாயா-இது!
கஷ்டகாலம் என்
முன்னோர்கள் கொடுத்து வைத்தவர்கள்-அதை
நீங்கள் கெடுத்து வைத்தீர்கள்!

கனுக்கால் தண்ணீ ஆனாலும் கானக்கிடைக்காத அழகு
 இந்த ஆறு!
கட்டை வண்டி பாதை
யாக்கியது யாரு?
நீயே கூறு!

வேகமெடுத்து ஓடிய
காட்டாறு-கடல் தீண்டா
கன்னி அவள்!
இன்று- கண்ணீரும் கம்பலையுமா
உடல்குருகி ஊன்வுருகி
மனஞ்சுருங்கி
 மரித்துக்கொண்டு
 இருக்கிறாள்...!

அவ ஓலமிட்டு ஓவென
அழும் ஓசையை
யார் அறிவா(யா)ர்
நகர் மத்தியில்
நாற்றமெடுத்தும்
நாதில்லை பேண-ஒரு
வாதில்லை காண!

ஆண்டுக் கொருமுறை
சித்திரை திருவிழா
முத்திரை பதிக்கும் உலா...
அதுவும் இலா-மறந்து
போகும் மாயமும் நட...

அன்று-
நீருக்கு ஊற்றானாள்
இன்று-
நிர்கதி கூற்றானாள்
அன்று-
அஸ்தி கரைக்கவும்
குஸ்தி கற்கவும் இடமுண்டு!
இன்று-
பலருக்கு
ஆஸ்தியாகவும் அவதியாகவும் இருக்குது!
கருமாதிக்கு காரியம்
பண்ணின இடம்
உருமாறி உபத்திரமாகி
ஆடு மாடு மேய்த்தல் போய்
 மட்டை ஆட்ட
மேடுவாகி போனது!

எழில் கொஞ்சி
 புகழ் மிஞ்சி
 ஓடிய நதி...
நாற்றத்திற்கு அஞ்சி
மாற்றத்திற்கு கெஞ்சி
ஓடுது! இது விதி...
பூர்வீக பூர்வாங்கப் புது
பயணம் வரும்-ஆறும்
புது பவனித் தரும்
காலம் மாறும்-எம்
கஷ்டகாலம் தீரும்
காத்திருக்கிறேன்
கண்கள் பூத்திருக்கிறேன்...
வேர்த்தன நாணல்
கொட்டித் தீர்த்தன!
நீர் யற்றுப் போனதால்
என் கண்ணும்
நீர் விட்டுப் போனது!

இந்நிலை மாறும்
அது நனவாகும்
காத்திருப்போம்!

தேவா.
நாணல் போல் நானும்!

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1