மறந்தோமே நாம்
துறந்தோமே...
ஆற்றுக் குழிவெட்டி
ஊற்று நீர் மோக்க
சிறு தே(ங்) சிறட்டை
காலி கை டப்பா
நீர் தேக்க!
பித்தளைக் குடம்
மண்பானை நீர் சேர்த்து
இருபது நிமிடம்
இருப்பிடமாகி...
இளவட்டம் தோள் தூக்க
இளையவள் இடை தாங்க
மூத்தவள், தலை சுமக்க
ஆற்று மணலில் பாதம்பதிய
அன்றாட பொளப்பாச்சு
ஆயினும் உடற் சிறப்பாச்சு!
மாசில்லை மருக -ஒரு
தூசில்லை -கிடை(க்கும்)
தண்ணீருக்கு காசில்லை!
இதுப் போல் துன்பமில்லை

தோள் பெருத்தது
இடை வலுத்தது
இன்றி யமையா பிரசவம் சுலுவாச்சு...
அது சுகமாச்சு!
மருத்துவ சே(தே)வை
மகத்தானது - அது
எப்பவாவது மட்டும்
மருந்தானது!

இன்று
மருந்தே விருந்தானது...
ஆறே இல்லை -பின்
ஊற்றுக்கு எங்கே
போவது!
அன்று சிறப்பானது
இன்று சிரிப்பானது!
மனம் வெட்கி...

தேவா

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1