விசித்திரமான உலகு
விந்தை யாய் பழகு(ம்)!
ஆணவத்தில் ஆடி
அனுபவத்தை நாடி
உயிர் விட்டு ஓடும்!

நடித்தால் ரசிக்கும்
துடித்தால் சிரிக்கும்...
பகிர்ந்தால் தவிர்க்கும்
பகிராவிடில் துடிக்கும்!

கேட்டால் மறுக்கும்
கேளாதை கொடுக்கும்
கேடில்லை எனும் போது
கேட்பாரும் இங்கில்லை!
கூடி மகிழ
குன்றிப் போய் அகழும்!

எட்டாததற்கு முயலும்
கிட்டாததற்கு தவிக்கும்!
முறனோடு முன் வாயில்
முகமெல்லாம் பல்லாய்...
மனிதன் கெட்டு
போனப் பின்னே
மனந் தொட்டு
பார்ப்பதென்ன!

மயிலுக்கு போர்வை
மறந்தோமே
அப்பார்வை!
சேவைக்கு சோறுப்
போய்-கடமைக்கும்
காசுதானே!
கள்ளிப் பாலை
கலந்தோமே காலத்தே
முன் பாலை
முகம் மறந்து!

வெடிச் சத்தம்
வெடிக்க வைத்து
கேட்காமலே சிதறினோம்...
கேட்க காது யடைத்தோம்!

நில்லாது ஒடினோம்
ஒடியே தேடினோம்
தேடியே நாடினோம்
நாடி கிடைக்காது
வாடினோம்...
வாடி பிறர் சாடினோம்!
சாடி சாவதற்கா
நெஞ்சுக்கு(ழி)ள்
அடைக்கி வைச்சோம்!

சங்கடங்கள் நூறு
சஞ்லங்கள் பலவாறு
சட்டங்கள் வேறு
தாண்டிச் செல்ல
தூண்டிப் போட்டோம்
நோண்டிப் பார்த்து
வேண்டிக் கொண்டோம்

வேதனைக்கு யஞ்சி
வேற் பல கெஞ்சி
உயிர் போகுமுன்
உரமாக்குவோம்-இனி
இப்படி யிருக்க லாகாதென...!

தேவா.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1