தீதும் நன்றும்
பிறர் தர - வாராது...
நன்றாய்-
மனதில் நின்று
ஒன்றினைக் கொன்று
மற்றொன்று வெளிவரும்!
தெளிவுரும் பின்-அது
தீதா - நன்றா(ய்)
திறம்பட திரும்பிவரும் நமக்கு வரமாய்!
உள்ளிருப்பதும் உமிழ்வதும் - அதுவே!

வார்த்தை வார்க்கும்-நா
அது தீ போன்றது
ஆக்கும்
அது பலவாக்கும்!
இணையாய் துணை சேர்க்கும்...
உயர்வாய் உயர் நிலையாய்!
அழிக்கு மது பலவாறு
சேர்க்கும் சேறு
நன்றியை நடப்பை
உறவை உறுதுணையை
உண்மை யை உன்
தன்மையை!
மொழி யழிக்கும்
மொழியும் உனை(யும்)
அழிக்கும்!
அறிந்துகொள் நீ
அடைக்கிக் கொள்-
நாஅடக்கம் தன்னடக்கம்
அது தரம் கொடுக்கும்!

வலி யென்பது-வாழ்விற்கு வழி போன்றது!
உன் வலி நீ உணர்ந்தால்...
அவ்வேதனை நீ
அறிந்தால்
இன்னும் வேர்கிறது
உனக்குள்
உணர்வோடு
உயிரோடு இருக்கிறாய்!
பிறர்வலி தன் வலியாய்
நீ அறிந்தால்
வேதனை வேறில்லை
உனக்கும் எனக்கும்
வேற உவமை யில்லை
உணர்ந்தால்...
மனிதனாய் மாறாது
இருக்கிறாய்!
மனிதம் இருந்தால்
மரணம் நெருங்காது...
இறந்தும் வாழ்வாய்!
இல்லையேல்
இருந்தும் சாவாய்!
பல உள்ளங்களில்...
சில இல்லங்களில்!

தேவா.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1