சிலம்புச் சுருக்கம்!-1
சிலம்புச் சுருக்கம்!
ஒரு கோமகனும்
கோமகளும்-கூட
மகிழ் தேட
ஜோடி சேர்த்தனர்...
கூல வாணிகரும்
அவர்கூட நட்பு ஆனவரும்!
காவிரி புகும்
பட்டிணத்தில்
அரைக்கால் பட்டிணம்
அவர்களது!
கிளியாய் அவளிருக்க
கிளை முறித்த
குரங்காய் அவன்
ஓட...
இடைச் சேர்ந்தாள்
இடை யில்லா
ஆடல் அழகி
தடை யில்லா
பாடல் பழகி!
மாதவி பெண்
மயிலாய்...
ஆடினர் குழைந்து
பாடினர்!
ஆடும் போதும்
பாடும் போதும்
பணமும் போனது...
வீட்டு நினைவும்
போனது!
நண்டு கொழுத்தால்
வலை தங்காது
பெண்டு கொழுத்தால்
நிலை கொள்ளாது
வாய் நிற்காது!
வார்த்தை வெளியேறி
அந்த வர்த்தகம்
பாதித்தது...
பாவி மகனுக்கு
மொத்தமும் பாதித்தது!
புத்தி வந்த வேளையில்
சட்டிச் சோறை
பங்கு போட...
சங்கடத்தில் ஆழ்த்தி
கண்
சரணத்தில் வீழ்த்தி
கால் சிலம்பை
கடனாக் கேட்க
மிஞ்சியது அதுவே
கடைசி யாய் காலைக்
கொஞ்சியதும் அதுவே!
கேட்ட மாத்திரத்தில்
கழட்டி...
வார்த்தை சுழற்றி!
வாழ்ந்து கெட்ட குடி
கையில் இதேப் பிடி
நமக்கு வரலாறு வேண்டாம்
வாழ்ந்தால் போதும்!
வர்த்தகம் பார்
வேறு ஊர் சேர்
இங்கு மட்டும் வேண்டாம்
மானப் பங்கம்
உண்டாம்-உமக்கு!
பதிலுரைத்தாள்
பத்தினி!
சிலம்பு கொடுத்த
வர்த்தினி!
மதுரைக்கு போவோம்
வாணிபத்தில் உயர்வோம்!
வாய் உயர்த்தினான்...
கை அமர்த்தினாள்!
காரியம் செய்-இனி(யாவது)
காட்டு உன் மெய்
அது வரை...
காடு மேடு சுற்றி
ஆறு தாண்டி
கவுந்தி யடிகளை
வேண்டி...
தஞ்சமடைய அவளை
விட்டு
நல் நெஞ்சமுடைய
கோவலன் போனான்...
கனவில் பாதி
கவனத்தில் மீதி
மீண்டும் காத்திருக்க
ஆனால்...
போனவன் போனவன்தான்
கள்ள பொற்கொல்லன்
நல்ல உரேக்கல் கொண்டு
சொல்லேந்தி சென்றான் -மன்னா!
சிக்கியது ராணியின்
சிலம்பு...
கக்கியது வாணிபன்
அலும்பு!
வில்லேந்தும் வேந்தனுக்கு
விசயம் தெரியாது!
வெட்டி வா
அவன் தலையை...
எட்டித் தா
உன் கொள்முதலை!
கொனார்ந்தான் காவலன்
கொக்கரித்தான்
கோமகன்!
சிர மிழந்தான்
கோவலன்!
சேதிக் கேட்டு
வீதி வந்தாள்
சாவுக் கேட்டு
கதி நொந்தாள்!
நீதி கேட்டு-மன்னன்
வீட்டுக்கே வந்தாள்!
மிச்ச மொரு சிலம்பை
சிதற வைத்து
பார்த்தவரை பதறவைத்து-அவன்
தவறை உணர வைத்து
கள்வனா என் கணவன்
கயவனே நீ!
ஆனவன்...
சொல் வெடித்தாள்
பல் கடித்தாள்!
மன்னன் மானஸ்தன்
பழி யஞ்சி
உயிரை மாய்த்தான்!
பாதங் கொஞ்சி
அவன் மனைவியும்
மரணித்தாள்!
பாவம் அஞ்சி
அந்த வஞ்சி!
பரவாயில்லை என
விட்டியிருக்கலாம்
இத்துடன்...
மிதம் மிஞ்சி
நீதிகேட்டு வீதிக்கு
வந்தாள்...
விடாதே கயவர்களை
கூறி வந்தாள்!
குலம் காக்கும் பெண்
குணம் காக்க மறந்தாள்
அங்கு-
மன்னன் மடிந்தும்-அவன்
மனைவி மடிந்தும்-தன்
கணவனை இழந்தும்
மங்காது சினத்துடன்
தாங்காது மன கனத்துடன்
மாநகர் வீதிகளில்
மாறாத ஜோதியாய்...
பார்த்தவர்கள் பதறினர்
பார்ப்பனர்கள் அலறினர்
பாதிக்கப் போகுது
மதுரை
தீ!
பத்திக்கப் போகுது
யென...
ஒரு கோமகனும்
கோமகளும்-கூட
மகிழ் தேட
ஜோடி சேர்த்தனர்...
கூல வாணிகரும்
அவர்கூட நட்பு ஆனவரும்!
காவிரி புகும்
பட்டிணத்தில்
அரைக்கால் பட்டிணம்
அவர்களது!
கிளியாய் அவளிருக்க
கிளை முறித்த
குரங்காய் அவன்
ஓட...
இடைச் சேர்ந்தாள்
இடை யில்லா
ஆடல் அழகி
தடை யில்லா
பாடல் பழகி!
மாதவி பெண்
மயிலாய்...
ஆடினர் குழைந்து
பாடினர்!
ஆடும் போதும்
பாடும் போதும்
பணமும் போனது...
வீட்டு நினைவும்
போனது!
நண்டு கொழுத்தால்
வலை தங்காது
பெண்டு கொழுத்தால்
நிலை கொள்ளாது
வாய் நிற்காது!
வார்த்தை வெளியேறி
அந்த வர்த்தகம்
பாதித்தது...
பாவி மகனுக்கு
மொத்தமும் பாதித்தது!
புத்தி வந்த வேளையில்
சட்டிச் சோறை
பங்கு போட...
சங்கடத்தில் ஆழ்த்தி
கண்
சரணத்தில் வீழ்த்தி
கால் சிலம்பை
கடனாக் கேட்க
மிஞ்சியது அதுவே
கடைசி யாய் காலைக்
கொஞ்சியதும் அதுவே!
கேட்ட மாத்திரத்தில்
கழட்டி...
வார்த்தை சுழற்றி!
வாழ்ந்து கெட்ட குடி
கையில் இதேப் பிடி
நமக்கு வரலாறு வேண்டாம்
வாழ்ந்தால் போதும்!
வர்த்தகம் பார்
வேறு ஊர் சேர்
இங்கு மட்டும் வேண்டாம்
மானப் பங்கம்
உண்டாம்-உமக்கு!
பதிலுரைத்தாள்
பத்தினி!
சிலம்பு கொடுத்த
வர்த்தினி!
மதுரைக்கு போவோம்
வாணிபத்தில் உயர்வோம்!
வாய் உயர்த்தினான்...
கை அமர்த்தினாள்!
காரியம் செய்-இனி(யாவது)
காட்டு உன் மெய்
அது வரை...
காடு மேடு சுற்றி
ஆறு தாண்டி
கவுந்தி யடிகளை
வேண்டி...
தஞ்சமடைய அவளை
விட்டு
நல் நெஞ்சமுடைய
கோவலன் போனான்...
கனவில் பாதி
கவனத்தில் மீதி
மீண்டும் காத்திருக்க
ஆனால்...
போனவன் போனவன்தான்
கள்ள பொற்கொல்லன்
நல்ல உரேக்கல் கொண்டு
சொல்லேந்தி சென்றான் -மன்னா!
சிக்கியது ராணியின்
சிலம்பு...
கக்கியது வாணிபன்
அலும்பு!
வில்லேந்தும் வேந்தனுக்கு
விசயம் தெரியாது!
வெட்டி வா
அவன் தலையை...
எட்டித் தா
உன் கொள்முதலை!
கொனார்ந்தான் காவலன்
கொக்கரித்தான்
கோமகன்!
சிர மிழந்தான்
கோவலன்!
சேதிக் கேட்டு
வீதி வந்தாள்
சாவுக் கேட்டு
கதி நொந்தாள்!
நீதி கேட்டு-மன்னன்
வீட்டுக்கே வந்தாள்!
மிச்ச மொரு சிலம்பை
சிதற வைத்து
பார்த்தவரை பதறவைத்து-அவன்
தவறை உணர வைத்து
கள்வனா என் கணவன்
கயவனே நீ!
ஆனவன்...
சொல் வெடித்தாள்
பல் கடித்தாள்!
மன்னன் மானஸ்தன்
பழி யஞ்சி
உயிரை மாய்த்தான்!
பாதங் கொஞ்சி
அவன் மனைவியும்
மரணித்தாள்!
பாவம் அஞ்சி
அந்த வஞ்சி!
பரவாயில்லை என
விட்டியிருக்கலாம்
இத்துடன்...
மிதம் மிஞ்சி
நீதிகேட்டு வீதிக்கு
வந்தாள்...
விடாதே கயவர்களை
கூறி வந்தாள்!
குலம் காக்கும் பெண்
குணம் காக்க மறந்தாள்
அங்கு-
மன்னன் மடிந்தும்-அவன்
மனைவி மடிந்தும்-தன்
கணவனை இழந்தும்
மங்காது சினத்துடன்
தாங்காது மன கனத்துடன்
மாநகர் வீதிகளில்
மாறாத ஜோதியாய்...
பார்த்தவர்கள் பதறினர்
பார்ப்பனர்கள் அலறினர்
பாதிக்கப் போகுது
மதுரை
தீ!
பத்திக்கப் போகுது
யென...
Comments
Post a Comment