ஆண்டாள் பெருமை! 2



கால்கள் மண் பட
கனவு களில் கண் முட
காட்சியில் அவன் கூட
சாட்சியாய் நெஞ்சாட
நினைவெல்லாம்
 நின்னைச் சுற்றியே...
அறியவில்லை என்னைப்
 பற்றியே
ஆய்த்தமாய் உனக்காக
நான் இருக்கும் போது
நாதா!
தெருவில் போறவனுக்கு இல்லை
என் தேகம்
நான் தேக்கி வைத்தது
என் தந்தை தூக்கி
வளர்த்தது...
சராசரி மனிதனுக்கு
கிடைக்க யில்லை
உலகம் காக்கும்
மாமன்னனுக்கு - அந்த
அரங்க நாதனுக்கு படைக்க!
வாய் துடுக்காய்
வார்த்தை பேசியே
எல்லாம் வல்ல
என்னுள் எல்லாமாய்
உள்ள...
வைகுந்ந வாசியே-எனை
கொஞ்சம் நேசியே-நான்
என்றும் உன் தாசியே!
உன்னுடன் சேர சற்று
யோசியே(ன்)
உனக்கு-நான்
இரண்டாவதோ மூன்றாவதோ தெரியாது-ஆனால்
உன்னுடன் ஒன்றாவது
உறுதியே - அது
இறுதி யே
எனக்கில்லை அதில்
ஒன்றும் மறதியே!

அவன் மறக்காமல் இருக்க - அவளை
மறுக்காமல் இருக்க
நார் சேர்த்தே மாலையாக்கினாள்
மார் சேர்த்தே நாளும்
சூட்டினாள்!

அந்த
உறங்காதவனுக்கு
ஊர்காவலனுக்கு
உத்தரவு போட்ட உத்தமி
குழப்பம் மில்லாது
 குழம்பி போனாள்-தினம் கிளம்பி
கோவிலுக்கு போனாள்
பார்ப்பவர்கள் எல்லாம்
நகைக்க
பக்கத்தில் இருப்பவர்
பகைக்க - அவள்
தந்தை யோ திகைக்க
அவள் மட்டும் நினைத்திருந்தாள்
அவன் நினைவில்
 நனைந்திருந்தாள்!
அநேகமாக வருந்திருந்தாள்
அன்றாடம்
பாசுரங்கள் அறிந்திருந்தாள்
அறிவித்திருந்தாள்
அதையே ஆகாரமாய்
பருகி இருந்தாள்!

எத்துனை நெஞ்சுரம்
எத்தனை வைராக்கியம்
கற்பனை க்கும் எட்டாத
காரியம் அன்றோ...
அவள் காவியம் அன்றோ!

கடைசியில்
ஆண்டாள் வென்றாள்
அரங்கன் நின்றான்
அவள் தந்தை கனவில்!
சிரித்தான் - மொழி
சொரிந்தான்
ஆழ்வாரே!
ஆழைத்து வா
திரு ரங்கத்திற்கு
ஆண்டாளை
முடிக்கிறேன் மனம்
தருகிறேன் அவளுக்கென்று ஒர்
இடம்!
இது திடம்
நடக்கட்டும் நடக்கும்
அவ்விடம்!
அழைத்துக் கொள்
துணைக்கு மதுரை
 மன்னனையும்
கனவில் வந்தவன்
சொன்னான்
சொன்னவன் மறைந்து
சென்றான்!

பெரிய ஆழ்வாருக்கு
தூக்கி வாரிப் போட்டது
மீண்டும் அரங்கன்
சொல் கேட்டது
அவர் மனம் யாழ்
மீட்டியது!
நா வறண்டு வார்த்தை
பெரிதாகவில்லை
அம்மா தாயே ஆண்டா
அழைத்தார்
தூங்கி யவளை உசிப்பி
உச்சி முகர்ந்தார்
உள்ளங் குளிர்ந்தார்
மெல்ல குனிந்தார்...
காதோடு சொன்னார்
அம்மா - ஆண்டாள்
உன்னை ரங்கன்
ஏற்றுக் கொண்டார்
என்னிடம் தோற்று
நின்றார்
வாடா முல்லை யே
வாடகை பிள்ளை யே
மனதிற்க்குள் சொல்லி
கொண்டார்!
என்ன தவம் செய்தேன்
 உன்னை காக்க
அரங்கனைப் பார்க்க
தாயே ஆண்டாள்
நீ வாழ்வாங்கு வாழ
வாழ்த்துகிறேன்
வாழிய பல்லாண்டு!
ஆண்டாள் மறைந்தாள்
ஆனால் யாரும் மறக்கவில்லை
ஆண்டாள் வருகை
திருமாலின் பெருமையே - என்
ஆண்டாளின் பெருமை!

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1