வலிகள்...!

வலிகள்!
ரணங்களாய்...
வலி வருந்தச் செய்யும்
வலி திருந்தச்செய்யும்
ஒருபோதும் திருப்பிச்
செய்யா...

வலிகள்
கண நேர(ம்)த்தில்
மன வுறுதியை குலைக்கும்!
நிதானமிழக்கும்...
சில வலிகள்
நீங்கா ரணங்களாய்
மனதில் இரத்தக் கட்டாய்...

வலிகள்
மாறுபட்டதாய்...
தன்மையில்
ஒன்றுபட்டதாய் நிகழும்
நிகழ்ந்த வை!

பாத்ரூம் குழாயில்
முட்டிக் கொண்ட போது
உச்சந்தலை
விண்னென்று தெரிக்கும்!
கட்டில் முனையில்
கால் முட்டி இடித்துக்
கொண்ட போது...
கல் ஈடறி கால்
பிரளும் போது
அருகாலில் இடித்து
கட்டைவிரல் நகம்
பெயர்ந்தபோது...
பணம் பறிகொடுத்த
போது
பேருந்து பயணத்தில்
கால் செருப்பு அறுந்தபோது
வியபார நட்டம்
அடுத்து என்ன நிலை
வந்த போது
காசு இல்லா நேரம்
தங்கை வீட்டிற்கு
வந்த போது
செல்ல மகன்!
முதன் முதலாய்
எதிர்த்து பேசுய போது
கட்டிய மணைவி
கண்ணீர் விடும்போது

இயலாமையை
பட்டியலிட்டு கூறும் போது
உணவு அருந்தும்
வேளை  -  உணர்த்திய
விசயங்கள் விசமாய்
ஆன போது
அன்புக்குரியவர்
மரணத்தின் போது
வழிப்பயணத்தில்
சந்தித்த அசம்பாவிதம்...

தெரிந்தவர்களிடம்
ஏமாந்த போது
நண்பன் கஷ்டபடுகிறான்
 கேட்டபோது...
மகளின் கண்ணீரை
சந்திக்கும் போதெல்லாம்...
வலிக்கும்!
அந்த வலிகள்
ரணங்கள்...
ஒரு நிமிட மரணத்திற்கு
ஒப்பானவை!

தேவா.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1