வார்த்தைகள்...!



உன் வார்த்தைகள்
எமக்கு
காலை வணக்கமாய்
நல் இணக்கமாய்
உற்சாக உதயமாய் 
வானத்து வசந்தமாய்...

உன் 
வார்த்தை கள்!
எமக்கு
போதை வூட்டும்
பாதைக் காட்டும்
மனச் சருகாகும்
கைச் சிறகாகும்!

உன் வார்த்தைகள்
விதி விலக்காய்
எமக்கு
வினை யூட்டும்
வீணையாட்டம்
நினைவூட்டும்
நெஞ்சில் நிப்பாட்டும்...

உன் வார்த்தைகள்
நலந் தரும்
பலந் தரும்
வளந் தரும்
சுகந் தரும்-புது
களந் தரும்!

உன் வார்த்தைகள்
வசப் படுத்தும்
திசை வுணர்த்தும்
இசையாய் சுவையூட்டும்
செறுக்காய் மீசை
முறுக்கும்....!

உன் வார்த்தைகள்
எம்மை
ஒளிரூட்டும்
குளிரூட்டும்
வியப்பூட்டும்
கண்மூட தாலாட்டும்!

உன் வார்த்தைகள் 
எம்மை
உணரச் செய்யும்
கவி புணரச்செய்யும்
புவி வுணரச்செய்யும்
மனப்
புரவியாய் ஓடச்செய்யும்!

உன் வார்த்தைகள்
எமக்கு
நன்மை பயக்கும்
வன்மை போக்கும்
செம்மை யாக்கும்
சிந்தனைச் செறியூட்டும்
நாள் ளெல்லாம்
சிறப்பூட்டும்
வெகு சிறப்பாக்கும்!
என்றும்-உன்
வார்த்தை கள்
எமக்குள்
ஆர்ப்பரிக்கும்...
அன்புடன்!

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1