வா நண்பா வா!
கமல்ஹாசனுக்கு
என் நேசனுக்கு...!
களத்தூரின் தொடக்கமே
ஆனந்த ஜோதியே
உனைப் பார்த்தாலே
கலைப் பசித் தீரும்...
சலங்கை ஒலியே
எங்கள்-
பாச வலையே
திரை உலகின்
சகலகலா வல்லவனே!
அகிலம் போற்றும்
உலக நாயகனே
என் வாழ்த்துக்கள்!
இனி எல்லாம் இன்ப ம(ய்)யம்...
பல ஆடு புலி ஆட்டம்
கண்டு-அவர்கள்
சட்டம் என் கையில்-என
அபூர்வ சகோதரர்களாய்
பம்பல் கே சம்பந்தர்களை
விருமாண்டி போல்
வீரநடைப் போட்டு
தாய் இல்லாமல்
நான் இல்லை
உணர்ச்சி பொங்க பேசி
ஹேராம், அன்பே
சிவமென துணைக்கு
அழைத்து
மூன்றையும் முடிச்சாக்கி
தமிழகத்தில்
பாப(வ) நாசத்தை
விளைத்த
தேவைகளின் மகனாய்
நடித்து-அந்த
பஞ்சதந்திர மூர்த்திகளை
உத்தம வில்லர்களை
உன் ராஜ பார்வையில்
பேர் சொல்லும் பிள்ளையாய்
டிவிட்டரில் பேசி
அந்த ஊதா(ரி)ப்பூ
கண் சிமிட்டுகிறது...
தூங்காதே தம்பி
தூங்காதே!
என்ற குணா திசையம்
கொண்ட-சிங்கரா வேலா
மூன்றாம் பிறையாய்
எழுந்து
ஆளவாந்தாயா
இந்தியனே!
கம்யூனிஸ்ச சித்தாந்த
சிவப்பு ரோஜா வே
மனம்-
டிக் டிக் டிக் என
அடித்துக்கொண்டது!
நீ அரசியல் பேசும்போது
அடிவாங்கி அடிவாங்கி
அரவனைக்கும் போது
கூட-அடிப்பதுப் போல்
உள்ளது!
அரவனைக்க வா
சத்யா
எங்களுக்கு கிடைத்த
அலாவுதீனும் அற்புத
விளக்கே!
தமிழகத்தின்
மகா நதியே
தூய்மை படுத்த வா
உயர்ந்த உள்ளமே!
காதல் மன்னா-பல
தாரம் கண்ட
கல்யாண ராமா
இப்ப-
மகளிர் மட்டுமல்ல
எல்லோரும் உனை
நோக்கியே...
காக்க (வந்த) வா
காக்கிச் சட்டையே
இன்னும் உனக்கு
இளமை ஊஞ்சலாடுகிறது...
இருந்தும்- இருக்கட்டும்
பல சாதனைகள்
கலைத்துறையில்...
அடுத்து அரசியலில்!?
தசாவதாரமாய்-நீ
விஸ்வரூபம் யெடுக்க...
வாழ்த்துகிறோம்
வரவேற்கிறோம்
நம்மவரை!
நாடு பார்க்கும்
நல்லவராய்..
Comments
Post a Comment