அன்னையர் தினத்தில்...!

தாய்மைக்கும்
தூய்மைக்கும்
உண்மைக்கும்
மேன்மைக்கும்
நேரானவள்...
அம்மா என்று
பெயரானவள்!

அன்புக்கும் ஆசைக்கும்
பாசத்திற்க்கும் மற்ற
அத்தனைக்கும்
நிகரானவள்...
அம்மா அன்றே
சோறானவள்!

சுக துக்கம்
இன்ப துன்பம்
வேறானவள்...
அம்மா!
முன்பே கருவானவள்
எனக்காக உருவானவள்!

இறை யின்றி
 கிடைக்காது எதுவும்...
இவரின்றி பிறக்காது
இறையும்!
தெய்வமும் தெய்வீகமும்
தெரிந்தது தான்-உன்
முகங்கண்டு அறிந்தது
நான்!

ஆலயமில்லா ஆண்டவரே
என் ஆலயத்தில்
அகப்பட்டவரே என்னை
ஆண்டவளே!

நீ! - என்னை
சூள் கொண்டமைக்கு
ஒர் நன்றி!
ஒவ்வாத ஒமட்டலுக்கும்
உடற் சோர்வாகி
தெகட்டுலுக்கும்...

பாராமாய் என்னாத
கருச் சுமைக்கும்...
பேருகால பெருவலி
தாங்கிய பொறுமைக்கும் ஒர்
நன்றி!

முலைப்பால் கொடுத்து
முகங் துடைத்தமைக்கு
முழு நேர பசியில்லாமல்
பார்த்தமைக்கும்...
நினைவுகளை மறந்து
நித்திரைகளை துறந்து
நித்தம் காத்தமைக்கும்

சில நாள் காய்ச்சலுக்கு
உண்ணாது நோன்பு
இருந்தமைக்கும்...
முழு ஆளாய் என்னை
முதன்மை யாய்
சேர்த்தமைக்கும்...

எத்தனை சொல்வது
எதனை விடுவது
அத்தனையும்
அடுக்கடுக்காய்
நன்றி சொன்னால்...
இந்நாளும் இத்தாளும்
பத்தா(தே)து! - இது
நான் மறக்காமல்
இருக்க அல்ல...
நீ!
மறுக்காமல் ஏற்க...!
நன்றி பல...

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1