மறக்க மனம்கூட-வில்லை யே!

என் வழி காட்டியே
எழுத்தில் நலங்கூட்டியே
எண்ணத்தில் வள மூட்டியே
நல் அகந் தீட்டியே...
என்னுள் என்னை-எனக்கு
முகங் காட்டிய பாலா
எனதருமைத் தோழா!
வாழ்வியல் முறை
காட்டிய குமரா...
எண்ணத்து மின்னலை
வண்ணத்து பின்னலாய்
ஆக்கிய மாறா!

மெர்க்குரி பூக்களிலும்
இரும்பு குதிரை யிலும்
உன்னுடன் இனணந்த
போது-என்
மன ஓட்டத்தின் படகோட்டி யே
தின ஓட்டத்தில் புத்தி
சிறக்க
என் தேரோட்டியே!

எழுத்துச் சித்தனாய்
எங்களை பித்தனாய்
ஆக்கியது உன் நூலா!
தேவைக்கு தேடச் சொல்லி...
தேகத்து ஆடையாய்
தேங்கிய ஓடையாய்
தெளிவித்த உரை நடையா...
என் பாலா!

யோகி அருள் இருந்தும்
போகப் பொருள் இருந்தும்...
உயிர் நீட்டாது போனீயே
எமக்கு கிட்டாது போ
நீயே!
பச்சை வயல் மாதாய்
இன்னும் மனதில் யிருக்க...
நெஞ்த்து உடையாராய்
நேசித்த உத்தமனே
நெடுங்காலம் வாழ்வீர்
என நினைத்தேனே...
இப்படி-
காவிரியில் கால் நீட்டி
காளானிடம் கை நீட்டி
இறை சேர்ந்தீரா அய்யா
நெஞ்சத்து நிறை
காத்தீரா  - அய்யோ!

கண்கள் பனிக்குது
கண்ணீரும் நனைக்குது
நின் முகம் நினைக்குது
இன்று சித்திரையும்
போனது
உன் நித்திரை யும்
நிரந்தரமாய்..
உன் பெரும் எழுத்தும்
பெயரும் புகழும்
சோழத்துப் பெரும் ஜோதியாய்...
ஒளிர யென்றும் மிளிர
என்றென்றும் அன்புடன்
உன் வழியில்
உன் நடையில்-நீ
பெரும் விடையில்...
நினைந்திருப்போம்
மனம்_
நனைந்திருப்போம்!

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1