அரசியல்!

அது -  அசிங்கம்...!
கமல் வேண்டாம்
அவர் நடிகர்
ரஜினி-அவர் அண்டை
மாநிலத்தவர்!
அன்புமணிராமதாஸ்
அது-சாதிக் கட்சி
முஸ்சிலிம் கட்சி-அது
வரக்கூடாது...
கிருஸ்த்துவர்களுக்கு
தனிக் கட்சி இல்லை!

ஸ்டாலின் - ஊழல் கட்சி
சீமான்-விடுதலைப்புலி
ஆதர வாளர்...
வைகோ தெலுங்கர்
விஜயகாந்த் ஸ்திரிதன்மை அற்றவர்
காங்கிரஸ் நல்ல
 தலைவர்கள் இல்லை!
பிஜேபி-மத வாதம்!

கம்யூனிஸ்ட்- அது
வேண்டவே வேண்டாம்
தமிழருவி மணியன்
அவருக்கு வாயிஸ் இல்லை!
வாசன் பாவம் இதுக்கு
ஆகமாட்டார்!
சகாயம்-அவரை ஏற்றுக்
கொள்ளமாட்டர்கள்
அதிமுக தலைமை
(சரி) இல்லை!

அப்ப-யார் தான் வரனும்?!
காமராசர் மாதரி
ஒருத்தர்...
சரி! - அப்ப நீ வா!
அய்யோ!
அரசியல் அசிங்கம்
அது சாக்கடை!
நா- வர... இறங்க...
அய்யோ ய்யோ...
இலவசம் போயிடும்
நான் வரமாட்டேம்ப்பா...!

தேவா.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1