ஆதங்கம்!

அந்நிய மோகத்தில்
அத்தனையும் தேகத்தில்
அயல்நாட்டு தா(க்)கத்தில்-அங்கேயே
முழு போகத்தில்...
நாகரிகம் யென்ற
பெயரில்
நகர்ந்ததொரு கூட்டம்!
இங்கு விட்டுப்போனது
நாட்டம்!

ஆண்டுக்கொருமுறை
வந்து-வசதிகளை
தந்து...
பெற்றோரை பிரிந்து
வாழவே வழிகண்டு
இம்மண் வாசனை
மறந்ததெப்படி-அந்த
முன்யோசனை
வளர்ந்த தெப்படி!
நட்பு விழகி
சுற்றார் உற்றார்
மனம் நழுவி
நாடிச் சென்றதென்ன
அங்கு தேடிச்
சென்ற தென்ன!?

வசதியும் வாய்ப்பும்
அருந்த எண்ணி
பிறந்த யிடம்
மருந்தாய் யெண்ணி
பிழைக்க போனவர்கள்
பெரும்-
பிழையாய் போனார்கள்
பெற்றவரை விட்டு
சிலர்- தான்
பெற்றதையும் விட்டு
திருமணம் மட்டும்
இங்கே வாம்-பின்
இருமுகமும்
அங்கேயே வாம்!

சொந்த வீட்டுக்கே
விருந்தாளியாக வரும்
வினோத பேரப்பிள்ளைகள்!
பேரு காலமும்
பெருங் காலமும்
அங்கே யேச் செல்ல...
அந்நிய குடிவுரிமை
குறியாப் போச்சு
இந்திய குடியுரிமை
இகழ்வாப் போச்சு!

தேசம் தாண்டிப்
போனாலும் நேசம்
மாறாது!
சொந்தம் கண்ட போது
சொல்லும் வார்த்தை..
முன்பு-
தாத்தா பாட்டி பார்க்க
பேரப்பிள்ளைகள்
பயணப்படும்
இப்ப
பேரப்பிள்ளைகளைப்
பார்க்க-தாத்தா பாட்டி
பயணம்!
நாகரிக மோகம்
நரைத் தலைகளையும்
விட்டு வைக்கவில்லை!

சமூகத்தில் நன்றாய்
இருப்பதற்கு சான்று
வெளிநாடு சென்று
தங்கியிருப்பது-போன்று ஒரு மாயம்
ஒரு மயக்கம்
மீளாது இது
மாறாது...!
என்ன செய்வது
என் ஆதங்கம்
எனக்குள்...

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1