அன்பரே ஆருயிரே!

கரம் தொட்டு
வாசிக்க சொன்னாய்
சிரம் தொட்டு-எழுத்தை
நேசிக்கச் சொன்னாய்
புறம் தொட்டு-தமிழை
சுவாசிக்க சொன்னாய்
பகிரச் சொன்னாய்
உணரச் சொன்னாய்
பகிர்ந்து ணரச் சொன்ன யாய்...
வலம் இடம்
தேடச் சொன்ன யாய்
நலமதை நாடச் சொன்ன யாய்
பிரித்து பார்க்க
பார்த்ததை  பக்குவமாய்
இருக்கச் சொன்னாய்
பெண் மனதறிய சகி
சினேகம் சொன்னாய்!

அதிகாலை முயக்கம்
அன்பின் சொர்க்கம்
அறியச் சொன்னாய்!
விடியலில் விழிப்பு
துடியலில் உழைப்பு
ஆசனம் ஆழ் நிலை
தியானம்...
அறிமுக நட்பு
அன்றாட செய்தி
அதி முக்கிய மென...
சிந்திக்க தூண்டி
செயலையும் தாண்டி
இறை வேண்டி-எம்மை
நிறை காண சொன்னாய்!

நீ சொன்னது பல
நா கற்றது சில...
முத்தாய்ப்பாய் எழுத்தில்
ஒழுக்கத்தை
நேர் கானச் சொன்னாய்
சித்தனாய் நீ எழுத
பித்தனாய் நான் படிக்க
எத்தனை தத்துவம்
எத்துணை முக்கியம்
வாழ்வியல் நெறிமுறை
வாழும் போதே கடைப்பிடி...
உனக்குள் கண்டுபிடி!
பிடிவாதத்தை போக்க
பல வித்தைகள்
படிக்க கொடுத்தாய்!
எல்லாம் சொன்னாய்
எழுத்தில் சொன்னாய்
ஏகமாய் நினைக்கச்
சொல்லி...
நகர்ந்து விட்டாயே
தவிக்கச் சொல்லி!
உன்னை காணாது
போனாலும்
உன் கற்பித்தல்
போகது!
எனை விட்டு நீங்காது
துயர் தாங்காது-என்றாலும்
தள்ளி நின்னே நான்
அழுவேன்!
பிரிவு இல்லை இதுவே
ஒரு பிளவு-அவ்வளவே!
இனி இயங்காது நின்ற
உடலுக்கு
நிகரில்லா அந்த
தனிக் கடலுக்கு
மாற்றம் ஒன்றும்(என்றும்)
இல்லை யே!
போற்றுவர் உன்
பெயர் சொல்லி யே!

மனதார வேண்டுகிறோம்
உன் மக்கள் நலம்
வேண்டுகிறோம்!
உன் இறப்பு வெல்லும்
அதை-உன் படைப்புச்
சொல்லும்!
உன் இருப்பு இல்லாத
இடைவெளியை
உன் எழுத்து இட்டுச்
செல்லும்...
உன் நினைவதை மீட்டுச்
சொல்லும்!

வானத்துள் வாழவே
வைத்துள் வீழ்ந்தீரோ...
அன்பரே ஆருயிரே!
இனி உன் நிழல்
விலாது இங்கே
உன் நிஜம் அகலாது
என் நெஞ்சை!
வருத்தத்துடன் பிரிவோம்
மண்ணீல்...
விருப்த்துடன சேர்வோம்
பின்னொரு நாள்
வின்னில்!
அன்பு பாலகுமாரா
வாழ்க உன் நேசம்
வளரட்டும் உன் தேசம்!

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1