கண்ணீருடன்...!



சேதிக் கேட்டு-என்
செவி ரெண்டும் அடைத்தது
நெஞ்சமெல்லாம் படபடக்க கண நேரம்
என் மூச்சு காணாத போனது!
வாய் பேசாது
கண் நீர் பெருக்க-உன்
நினைப்பு நனைத்தது
நினைத்தே
பார்க்க வில்லை நண்பா!
இப்படி நிரந்தரமாக
பிரிவாய் யென்று...
நேற்று-
இராத் தூங்கி எளாது
போனீயே ராசா
இன்று
எங்கள் எண்ணம் மெல்லாம் உனைத்
தாங்கி விழாது
போனதே ராசா!

என்ன நினைச்சு படுத்தாயோ
எதை நினைச்சு மறந்தாயோ மூச்சு விட
உன் கடைசி வார்த்தை என்ன
கடைசி மூச்சு எங்கே!?
கானாது போனோமே
இப்படி-எங்களை
தவிக்கவிட்டு போனீயே!

பழனிகுமாரா பழனிகுமாரா
சொல்லாமல் போன
நல்லவன் டா நீ...!
அடேய்
காலை வணக்கமும்-அந்த மலர் செண்டும்
இரவின் மடியிலும்-இனி
யார் தருவார்!?
இனி யார் தந்தாலும்
உன்-நினைப்புத் தானே வரும்!

கண்ண குழி அழகா
கரு நிற முகத்தழகா
கட்டியம் காட்டும்-அந்த
ஆதி சேர்த்த பேரழகா!
மதுரை ஜில்லா வாசம்
மாறாத அந்த பாசம்
மறக்குமா உன் நேசம்...
பாண்டிக் கோவில் ரோட்யோரம்
பவ்வியமாய் பார்க்கையில்
வாய்விட்டு சிரித்திருப்பாய்
கைகட்டி பார்த்திருப்பாய்
கால் ஆட்டி அமர்ந்திருப்பாய்
அந்த காட்சி யெல்லாம்
இனி கானல் தானோ!
எந்த விழாவிற்கு(ம்)
நீ வந்தால்...
அரங்கமே நிரைந்திருக்கும்
நட்போடு-நிறைஞ்சு
இருக்கும்!

நீங்காது உன் அலை
தீராது எங் கவலை
பார்க்காது போனனே
உன் முகம் கடைசியாய்
ஆதலால் மறாது
உன் முகக் கலை
இந்த பய நெஞ்சிலே!

ஒரு இடி ஒன்று
இறங்கி இருந்தாலும்-
என் தலையிலே
இந்த கனம் இருந்திருக்காது
ஒரு படித் தகவல்
காலையிலே கேட்டவுடன்
மொத்த மனமும்
நொருங்கியது!
அலைஞ்சாலும்
திரிஞ்சாலும்
அமையாது உன் நட்பு
இனி ஆராது தேராது
எம் மனசுல உன்நினைப்பு
எ(ங்க)ன் மாப்பு!
பன்னீரில் நீராட்டி
சந்தனத்தில் தீமூட்டி...
வேகாது உன் நினைப்பு
என்றும் மாறாது-உன்
முக சிரிப்பு!
என் நெஞ்சில்!
நம் குருப்பில்...

ஆண்டவரை அழைக்கிறேன்
கண்ணீருடன்
கேட்கிறேன்
கருணையுன் செய்யுங்கள்
பிறப்பு இறப்பற்ற
பேரின்ப தன்மை
பழனிகுமாருக்கு
பயக்குமே நன்மை
கிடைக்க அருள்வாய் நீ
என் இறைவா-நீ!

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1