தூத்துக்குடி துயரம்!
அய்யா பாரதி-உமக்கு
அன்றே தெரியுமா?!
சொந்த சகோதரர்கள் சாக கண்டு...
சிந்தை இறங்காதவர்கள் என!
தமிழ் சாதியின்
தரச் சான்றோ அய்யா
சொந்த சனங்களின்
உரைக் கல் நீயோ...!
பாரதியே - பார்
அங்கு தீயே!
தூத்துக்குடியில் சாவு
ஏதோ நோய் வந்தல்ல...
தீ கொளுத்தி யல்ல
துப்பாக்கி விசை அழுத்தி!
எழுச்சி யடக்க - இது
சூழ்ச்சி யா!?
வீழ்ச்சி இல்லையா இது
தமிழக அரசே!
தூத்துக்குடி துடிக்கிறது
உம் அரசு தண்டிக்கிறது
மக்கள் கெஞ்சுகிறார்கள்
ஆலை அடைக்கச் சொல்லி -அதை
முடக்கச் சொல்லி...
தீது வுண்டோ யென
அஞ்சுகின்றனர்!
நீர் மிஞ்சுகிறாய்
வாய்தா வாங்கி
வஞ்சிக்கின்றாய்!
தூத்துக்குடி மாவட்டமே
தண்டிக்கப் படுகிறது...
நீ கண்டிக்க படுவாய்!
அவர்கள் கண்ணீரோடு
கவலையுமாய்...
ஆலைகள் புகையும்
புகழிடமாய்
நீர் கண்டிக்காது -ஒரு
தகவலும் மில்லா!
நெஞ்சு பொறுக்கு தில்லை யே...
இது நிலை யில்லா அரசு
நிலைக்காது இந்த மவுசு
மாற்றம் வரும் புதுசா!
ஆனால்-போனது
வருமா புது உசுரா...
மன்னிக்க வேண்டுகிறேன்
சகோதரா!
மனம் துடிக்கிறேன்
எம்மால் ஆவதும்
ஏதுமில்லை - அங்கு
இனியொரு சாவு ஏதும்
தேவையில்லை...!
Comments
Post a Comment