ஈசா!

 இயங்குது...

மனுசா மயங்குது
மரங்களை அழித்து
மனிதம் ஒழித்து
மனைகளை வளைத்து
மனிதாபிமானம்
தொலைத்து...
மனங்கூட
ஞானம் தேட
நாளும் ஓட...
கட்டிய மடம்
அந்த இடம்!

ஜக்கி சொல்லில்
சொக்கிப் போனது -இந்த
அரசும் ஆதரவு ம்
வெட்கிப்போனது-அந்த
காடும் மலையும்...
நம் போல்!
நாளும் வளரது
நாடும் உதவுது
ரா(நா)ம் கதறவது
கேட்காது!

ஆதங்கம் நமக்கு
ஆக்குவது தங்கம்
அவருக்கு! - இது
அறியாத கூட்டம்
அவரோடு ஆட்டம்
ஆன்மீகம் அங்கில்லை
அமைதியும் அங்கில்லை
ஆணவமுண்டு
அ-மோகமும் வுண்டு
மெல்ல வருவார் மீண்டு
இது ஒரு வழிப் பாதை
ஒரு வகைப் போதை
காணம்மல் போவம்
இதைக் கண்டு!
ஈசா இயங்குது...

தேவா.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1