சுதந்திரம் எங்களது பிறப்புரிமை!



ஆம்-
சுதந்திரம் எங்கள்
பிறப்புரிமை...
சுயமாய் சிந்திக்க
சுகமாய் நிந்திக்க
சோம்பலாய் சந்திக்க

பெரியோர் சொல்
கேளோம்
பெரிதாய் வளம்
கனோம்
அரிதாய் நலம்
பேசுவோம்!
காசு வாங்கி
ஓட்டுப் போட்டு
கஷ்டங்களை கேட்டு
வாங்கி...
கடவுளை யும் துணைக்கு அழைத்து
வெகுவாய் கானாதுப்
போவோம்...
சுயம் பேசி சுயநலம்
நேசி யென!
சுதந்திரம் எங்கள்
பிறப்புரிமை!

அதிகமாய் ஆசைப்பட்டு
ஆணவமாய் ஏசப்பட்டு
எளிதாய் ஏமாறப்பட்டு
ஏகாந்தம் பேசி
முகாந்திரம் பரா
மூழ்கிப் போவோம்
கவலையில் கடனில். .

வேண்டுமென விரும்புவோம்
வேண்டாது யென
துரத்தி யடிப்போம்
தலையில் தூக்கி
ஆடுவோம்-பின்
தரையில் போட்டு
பாடுவோம்!
அரசியல் சாக்கடை
அதில் இறங்கோம்
அதை சமயம்-
பூக்கடையாய் முகர்ந்து
இயங்குவோம்!

எளிதாய் கிடைக்கவே
ஏளனம் பேசி-கை
எட்டாது போகவே
ஏராளமாய் நேசித்து
வீனாய் போவதற்கு
எம்மை(யே)
விலை பேசுவோம்!
சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை!

நல்லது கெட்டது
பகுத்து ஆராயோம்...
கிடைத்தது நல்லது
கிடைக்காதது கெட்டது
பார்த்து ஆணந்தமாய்
பரவசபடுவோம்!
உழைப்பில்லா உயர்வை போற்றுவோம்
உண்மையின் நிகழ்வை
தூற்றுவோம்
மாற்றம் வேண்டி(யே)
மனம் வருந்தி
மாற்றத்தை
எள்ளி நகையாடுவோம்
மனந் துள்ளி
விளையாடுவோம்!

போற்றுதலாய் போற்றுவோம்
தேர்தலில்
தூற்றுதலாய் தூற்றுவோம்
 தேடலில்...
ஆசையில் அரியணை
ஏற்றி
அனுசரியாது அவசரத்தில்
 அகற்ற
ஆளுக்கொரு காரணம்
தேடுவோம்
அதைச் சொல்லி
ஆளுநரை நாடுவோம்!
சாதி யில்லை பேசுவோம்
தன்சாதி உசத்தி -அதை
பேணுவோம்!
மதமில்லை எங்கும்
இருந்தும்
அவர் மதம் மன்றத்தில்
தங்கும்!
சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை!

 நூறாண்டு வரலாறை
(வரலாற்றை)
நொடியில் மறப்போம்
ஆறாண்டு சாதனைக்கு
கொடிக் கட்டி பறப்போம்!
தனியாது தாகம்
தீராது மோகம்
நிறையாது நோகும்-இருந்தும்....
நோகாது பேசுவோம்
வாடாது போவோம்
ஏதையும் தேடாது
சாவோம்!
சுதந்திரம் எங்கள்
பிறப்புரிமை...
அதை பேணாது போவோம்
கூசாது பேசுவோம்
அது எங்க(ள்)
பொறுப்பின்மை!

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1