தவப் பயன்!

என் தவமே! பலமே!!

என்னத் தவம்
செய்தேனோ...
உன் வழி தொடர
என் விழிப் படர!

நினைக்கும் போதெல்லாம்
நெகிழ்கிறது நெஞ்சம்
நனைகிறது
கண்ணீரில் கொஞ்சம்...

தூயவனே!
எம் துயர் துடைப்பவனே
உடற் பினிவுற்றப் போதும்
-தொடர்
பணிச் செய்ய
புறப்பட்டாய்!

கால் நடவாத போதும்
காலம் கடவாது
பிராத்தித் தாய்...
என் பிறப்புக்கு
பிந்திய தாய்-நீ!

அபாரச் செயல்
உன்  வாழ் இயல்...
அது-வான் வெளிப்
புயல்!  அதை
யார் அறிவார்(ரோ)
உம்மை யன்றி-நா(ன்)ம்
அறியோம்!

பிறர் நோய் தீர்க்கும்
மருந்தாய்...
இருந்தாய் நீ!

மாசுக் குன்றி போன
மன தெல்லாம்-நீ
தூசுத் தட்டிச் சென்றாய்
மனப் பேயைக் கொன்றாய்
என் மதியேறி நின்றாய்
மகிழ் வாழ நன்றாய்!

நிற்பதும் நடப்பதும்
குருவருள்! -அதை
நிலைநாட்டி காப்பது
உனது தூய வருளே!

உருவாக்கி தருவாக்கி
கொடுத்தாய் திருவாகி
நின்று!
கருவாக்கி கொண்டேன்
கருத்தாக்கி உண்டேன்
எல்லாமே
குல வழிப் பலன்
குருவழி நலன்!

போற்றுவார் போற்ற
தூற்றுவார் தூற்ற...
தொடரட்டும் உன்
தூய பயணம்
ஞாய நலினம்
நன்னியம்-அது
புண்ணீயம்!

புறப்பாடு நடக்கட்டும்
சற்றே புடம் போடு
உன் மேனி காக்க
கொஞ்சம் பேண வேண்டி...
வேண்டுகிறேன் தயவே
தயா அது நீயே!
(தயா நீ அதுவே)

தொடரட்டும் உம் பணி
தொடந்து பரவட்டும்-இனி
ஊர்மெச்சும் உலகு
மெச்சும் தொண்டராய்-நீ
தனி!
என்றும் காயா
எங்க கனி!
வணங்குகிறேன்
அன்பே சிவமாய்
ஆவீரோ-
சுகமாய் வளமாய்
நலமாய் மிகபலமாய்
என்றும்....
என்றென்றும்!

அன்புடன்.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1