ஆலை மூடலா...

பத்து வுயிர்-கொடுத்து
புத்துயிர் என்பதா
தூத்துக்குடி க்கு!
நல்ல சுவாசம் காண
மெல்ல சுவாசம் விட்ட
தியாகத்திற்கு...
பத்தும் மூன்றும் பதிமூன்றும்
உயிர் நீத்து...
உரிமை சேர்த்த
போராட்டத்திற்கு
வெற்றி என்பதா!
போய் சேர்ந்த தங்கங்களுக்கு
 அந்த
சிங்கங்களுக்கு
போற்றி சொல்வதா!

ஆலை மூடலுக்கு பலியா...
ஆகட்டும் இது விதியா!
நாலு நாளைக்கு முன்
செய்திருந்தால்
நற்கதி யாகிருக்குமே
நிற்கதியாய் போயிருக்குமோ
சில குடும்பம்!

ஆட்சியர் மாற்றம்
ஆனையர் மாற்றம்
மின் வெட்டு
நீர் அடைப்பு
ஆலை மூடல்-அறிவிப்பு
இது
புது உத்தியா-அல்லது
பின் புத்தியா!

அக்னி கழிவாய்
ஆனதென்ன இழிவாய்
குருதி கறையில்
உறுதி பெறவா-சுதந்திரம்
செத்து மீட்கவா
ஜனநாயகம்!
குடி மூழ்கி கோல்
உயர்த்தவா குடியரசு
சொல்லேன் என்
மத்திய மாநில
அரசே!

சிரசு இழந்து பெற்ற
பரிசா...
கரம் யிழந்து பெற்ற
மோதிரமா!
வாய்க்கு அரிசி
போட்டபின் ...
வாழ் வாதாரமா
பாடையில் போனப்பின்
பட்டு வேட்டி யா!
அரசை காப்பாற்ற வா
இல்லை
அரசியல் சானக்கியமா!

நிதானமாக யோசித்து
சொல்லுங்கள்
நாங்கள் புரிந்து கொள்ள
தமிழக அரசே!
இது வரமா சாபமா...

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1