செவிலியர் தினம்!



அன்னை அரவனைக்கும் முன்
நம்மை  அரவனைத்தவர்!
அன்பால் அசரவைத்தவர்!
ஆளுக்கு கோர் பெயர்
ஆங்காங்கே நமக்கு
இருக்கையில்...
இல்லை வேறொரு
பெயர் அவர்களுக்கு!

சாதி மத மட்டுமல்ல
நாடும் மொழியுங்கூட
பேதமில்லை!
எந்த சாதினாலும்
எந்த ஒரு மதமானாலும்
எம்மொழி பேசுவோர்
எவ்வூர் எந்நாட்டவர்
ஆனாலும்
அவர்களுக்கு ஒரே
பெயர்!  அதுவும்
தொழிலாகு பெயர்!
நம் மொழியில்
செவிலியர்
அயல் மொழியில்
நர்ஸ்...

இவர்களுக்கு
வயது பேதமில்லை
நிறம் பேதமில்லை
ஆனாலும்-
நிதானம் பேணுவது
நிச்சயம்!

மருத்துவத்திற்கு மூளை
போன்றவர் மருத்துவர்!
இருதயம் போன்றவர்
செவிலியர்...
மூளை செயலற்று
சில நேரம் சில காலம்
இருக்கலாம்
உயர் வாழலாம்!
ஆனா இருதயம்
செயலற்று...
இருக்கலாகாது-உடல்
செல்லற்றுப் போகும்!

இதில்-
உயர்வாய் எண்ணி
உயர்ந்தவர் சிலர்
இன்னும்
உன்னதமாய் எண்ணி
உழைப்பவர் பலர்!
பொறுமை நிதானம்
கருணை கடமை...
எப்படிச் சொல்வது
என்ன சொல்லுவது
இவர்களது பெருமை!

உதாரணம் உண்டோ
உவமைகள் உண்டோ
இவர்களுது வேர்வைக்கும்
நேரம் பாராது ஆற்றும்
சேவைக்கும்!
மருத்துவம் கண்ட
மகத்துவம்!

மருந்து காப்பாற்றத்
தவறிய சில
நேரங்களில் இவர்களது
மகத்துவம் மகிமை
காப்பாற்றி உள்ளது!
பொதுப் பார்வைக்கு
வெள்ளை ஆடை
பொழுதும் பார்த்தால்
புண்ணிய ஆடை!
இது விபத்தல்ல
விரும்பி யேற்றது!

இன்னும் கிராமங்களில்
சுகப்பிரசவமும்
சுகாதார பிரசவமும்
இவர்களாலே...

உற்றாரும் மற்றாரும்
செய்யாத
உன்னத செயலை
செயல்களை
அருவருப்பின்றி...
தாய்க்குப்பின் தயங்காது
மனம் ஒதுங்காது
தின பராமரிப்பு
தரும் பரபரப்பு
புது அவதரிப்பு!

தேக நலங் காக்கும்
இராணுவம்!
இவர்களை தேவதையாய் பார்க்கும்
மானுடம்!
வாழ்க உம் தொண்டு
வந்தனம் உம்மை கண்டு!
வளர்க உம் சேவை
வணங்குதல் தேவை!
இறை போன்றது
உன் உறவு...
நிறை கண்டது
உன் பரிவு!
போற்றுவோம் புகழுவோம்
இத்தினத்தை
இத்தினத்தில்....
செவிலியரை!
வாழ்த்துவோம்
வணங்குவோம்!
இன்னும்-

சுருங்கச் சொன்னால்
நம்-விடியலும் மடியலும்
இவர் கரம் யடியில்தான்
கருணை மடியில்தான்...
என்றும் ந்றைய
நன்றிகளுடன்
வாழ்த்துக்கள்!

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1