சந்திர கிரகணம்!

சந்திரா!
இன்று- கவணமாய் இரு
கொஞ்சம் கவணித்துக்
கொள் உன்னை!
இது மண்ணில் பேச்சு
உனக்கு ஏதாதவது ஆச்சு...
தாங்காது என் மூச்சு!

முடி சூடா மன்னன்
நீ! வானத்தின்
நிலவரசன்!
நிதானங் கொள் இன்று
நிறை பிறை கானும் முறை!
முழு பௌர்ணமி-இந்த
ஆண்டின் முதல்
பௌர்ணமி
பொறுமை காத்திடு
பொழுதும் பாத்திரு
காரணம்-
கிர - கணமாம்...!

விதி யாரை விட்டது
உன்னை விட
விண்ணைத் தொட!
விழிப்போடு யிரு
இது விளையாட்டல்ல
வீதி வுலா பார்த்து வா
முடிந்த வரை-முகிலோடு
மறைந்து வா!
அல்லது எல்லாம்
முடிந்த பின் வா!
பயம் கொள்ள வேண்டாம் - இது
மரணமில்லை
ஒரு மாற்றம் சிறு
நேரத்து மறைவு
அவ்வளவுதான்!
பதுங்கிக் கொள்
மதியே! அதுவே
என் நிம்மதி!
பார்த்துக் கொள்
என் நேசா...
நான் என்றும்
உன் தாசா!


Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1