மதுரையில் மழை!
வைகரையில் நீரோட்டம்
ஆனதே மனம்
பன்னீராட்டம்...
புது மழை
புது வெள்ளம்-என்
வைகை கொஞ்சம் குள்ளம்
மனந்துள்ளும்
மகிழ் அள்ளும்
பயிர் வெல்லும்...
நன்றி வர்ணா
மழைத் தரும் கருணா!
நடை மறந்து
இடை சிறுத்து
நதியில்...
மடை திறந்து
கடை விரித்து
நீரே...
மானுட உயிரே!
வாழ்க வளர்க
வருக வருக!
மெய் யின்பம் தருக
மேலும் வளம் பெருக!
வாய்க்கட்டும் இதுப்
போல்
மாதம் ஒருவாட்டி...
வந்து போ ஒருமுறை
தலைக் காட்டி!
தொடர் நிலை நாட்டி
ஏற்போம்-உனை
எந்தன் பெருமாட்டி...!
பயிர் வளம் செழிக்க
ஆவின் குலந் தழைக்க
தேக்க-
குளம் நிறைய
ஏங்கிய மனங் குளிர
ஏக்கம் மனங்களில் குறைய...
வந்து போ-இது
போல் தந்து போ!
மதுரையின் பெருமை
அறிந்து போ!
மீனனாட்சியின் மகிமை
தெரிந்து போ...!
நகை பெருக்கி
பகை விலக்கி
பயிர் உயர்த்தி
செழுமை வெல்ல
வளமைக் கொள்ள
எமை உருக்கி
தருவோம்-தருகிறோம்
நன்னியை...
எந்நீரே தண்ணீரே
செந்நீரே...
வருக வருக
சீறாய் ஓடி
சிறப்பாய் பாடி
வணங்குகிறோம்!
வாழிய நீ வளர்க நீ
வருக நீ! பெருகி நீ
தவழ நீ...
எம் மதுரை
பார்த்திருக்கிறது...!
Super....
ReplyDelete